பக்கம்:ஜெபமாலை முதலிய 5 சிறுகதைககள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"மிச்சம் இருக்குது"

"எங்கே"

"இருக்குதுன்னா விடுவயா, சும்மா மனஷனைப் பிடுங்கறேயே"

"எங்கேன்னா சொல்லுங்களேன்?"

"முடியாது போடி! சொல்ல முடியாது, காட்டவும் முடியாது"

"இருந்தாத்தானே காட்ட. அந்த எழவெடுத்த சாராயத்தை ஊத்திக்கிட்டு வந்தூட்டாச்சி. அடிவயித்தையே கலக்குதே,அடிக்கிற நாத்தம்"

"நாத்தமா அடிக்குது? இவ உடம்பு செண்டு நாத்தமாடி அடிக்குது! நாயே!"

இந்தவிதத்திலே கணக்குக் குறிக்கப்பட்டது. உரையாடலின் முடிவிலே, கந்தனின் கரம் குப்பியின் முதுகைப் பதம் பார்க்க அந்த அம்மையின் குரல், அண்டைபக்கத்து வீட்டாரின் காதுகளைக் குடைந்தது. குப்பு அதற்குப் பிறகு, தன் வரவு செலவுக் கணக்கைத், தின்பண்டம் கேட்ட குழந்தையின் முதுகிலே அறை கொடுத்தபடி, கூறிவிட்டாள். " அந்தப் பாவி ஈட்டுக்காரனுக்கும். சாராயக் கடைக்கும் அழுதது போக மிச்சம் 1-ரூபா கொடுத்தான். அரிசிக்கு அரைரூபா போச்சி, முளகா இரண்டணா ஆச்சி, உப்பு ஒரு அணா, எண்ணெய் இரண்டணாமிச்சம் ரெண்டணா முந்தானியிலே முடிஞ்சிவைச்சிருந்தேன், மூலக்காத்தாளுக்குக் கிடா வெட்டறாங்க, ஏகாச்சும் குடுன்னு பூஜாரி அய்யா கேட்டாரு, இருந்ததெ கொடுத்தேன். வேறெ என்ன இருக்கு எங்கிட்ட? தின்பண்டம் வேணும்னா நான் திருடத்தான் போகணும், ஒாணாவுக்குக் கருவாடு வாங்கி

14