பக்கம்:ஜெபமாலை முதலிய 5 சிறுகதைககள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வந்திருக்கிறேன். அதைத்தானே செய்யப்போறேன்.அதைத் தின்னாமே ஓலமிட்டா உதைதான் கிடைக்கும்?" என்று குப்பி கூவித் தன் வரவு செலவைப் பதிவு செய்தாள்.

குடும்ப வரவு செலவு இவ்வகையாக இருக்கிறது. பணம் கிடக்கட்டும் ஒருபுறம், பாடு எப்படி என்று பாருங்கள்.

செட்டியார் வேலை

காலை 7-30 க்குக் கண் விழித்தார்.
7-45க்குப் படுக்கையை விட்டு எழுந்தார்.
8-30க்குள் காலைக் கடன்களை முடித்தார்.
9-30 வரை, வீட்டிலே இருந்தார், காலை டிபன் வகையறா சாப்பிட்டார்.

வண்டி வந்திருப்பதாகக் காவல்காரன் வந்து சொன்னான்.

"ஏண்டா தடிக்கழுதே! நீ வர வரச் சுத்தச் சோம்பேறியாகிவிட்டே" என்று செட்டியார் கோபித்துக் கொண்டார்.

அந்தச்"சோம்பேறி" காலையிலே 4-30க்கு எழுந்திருந்தான். நடவு வேலையைச் சுருக்காக முடிக்கவேண்டுமென்று செட்டியார் சொல்லிவிட்டு வரச்சொன்னார் என்று உழவனிடம் போய்க் கூறிவிட்டு, ஒரு ஓட்டமாகத் தோட்டதுக்குப் போனான், அங்கு மத்தியானம் ஐயாவுக்கு ஆறு 'இளநீர்' எடுத்துக்கொண்டு கடைக்கு வரச்சொன்னான். அதைச் சொல்லிவிட்டு வருகிற வழியிலே, நெல்மண்டிக்குப் போனான், சுமார் ஒரு பத்து வண்டிதான் வந்திருக்கு என்ற

கணக்கு எடுத்துக்கொண்டான், எஜமானனுக்குச் சொல்ல

15