பக்கம்:ஜெபமாலை முதலிய 5 சிறுகதைககள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடிசைக்குப் போனான். அங்கே கட்டை இல்வை,புளியவிறகு ஒரே முடிச்சா இருக்கு என்று குப்பி சொன்னாள், கோடாலி எடுத்து நாலு தட்டு தட்டிப் போட்டுவிட்டு, ஒரு வெத்திலே காம்பு போட்டுக்கொண்டு, பழையபடி செட்டியார் பங்களா வந்து சேர்ந்தான், வண்டிக்காரனுக்கு "ஐயா புறப்படப் போறாரு" என்ற செய்தி கூறிவிட்டுப், பிறகு வந்து கூறுகிறான், வண்டி வந்திருப்பதாக, செட்டியார், அந்தக் "சோம்பேறி"யைக் கண்டித்துவிட்டு மனைவி அறைக்குப் போகிறார். வெளியே வருகிறார் 11 மணிக்கு! வண்டி இதற்குள் மூன்று தடவை அவிழ்த்து அவிழ்த்துக்கட்டியாகிறது. சோம்பேறி சுந்தன் குரோடன்சுகளுக்குத் தண்ணீர் ஊற்றி விட்டு, வேலிப்பக்கம் இருந்த குழியிலே மண் வெட்டிப் போட்டுச் சரிப்படுத்திவிட்டு, விளாமரத்திலிருந்து பழம் பறித்து வீட்டுக்குள்ளே கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டு, வியர்வையைத் துடைத்துவிட்டு, சாயத்துணியை உதறித் தலையிலே கட்டுகிறான். செட்டியார் அவனை "என்ன ராங்கிடா உனக்கு! துணியை உதறுவதும், தலையிலே முண்டாசு கட்டுவதும், மாப்பிள்ளை போல உலாத்துவதுமா இருக்கறேயே தவிர, வேலை வெட்டி ஒழுங்காகச் செய்யறியா? வரவர ரொம்பக் கெட்டுப் போய்விட்டே உனக்கென்ன இங்கே இருந்து ஒழுங்கா வேலை செய்து கொண்டிருக்க இஷ்டமில்லையா?" என்று கேட்கிறார். காவல்காரன், கும்பிட்டுக் கூத்தாடித் தன் அடக்கத்தை தெரிவித்துக் கொள்கிறான். வீட்டின் அலுவல் முடிந்தது என்று, செட்டியார் கடைக்குப் போகிறார். அங்கே "சோம்பேறிகள்" இருப்பார்களல்லவா, அவர்களை வேலைவாங்க! போகிறார் என்றால், எப்படி? வண்டியில்! வழியிலே மாடு கொஞ்சம், தொல்லை கொடுக்கிறது. வண்டி ஓட்டுபவன் நாலு நாளாகச் சொல்லிக்கொண்டுதான் இருந்தான்,

16