பக்கம்:ஜெபமாலை முதலிய 5 சிறுகதைககள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"லாடம் இல்லீங்க, மாடு நகரமாட்டேனென்குது, கால் தேய்ந்து போச்சு" எனறு. "ஏண்டா திருட்டுப்பயலே! லாடம் சுட்டிச் சரியா மாசம் மூணுகூட ஆகலயே, இதுக்குள்ளே லாடம் தேய்ந்து போச்சா? அந்த லாடக்காரன் ஏதாவது கமிஷன் கொடுக்கிறானா உனக்கு, மாசம் தவறாமே லாடம் லாடம்னு உயிரை வாங்கறே. அடுத்த மாசம் பார்த்துக்கொள்வோம்; தட்டி ஓட்டு என்று சொல்லியபடியே இருந்தார். அன்று அவன் தட்டித்தான் ஓட்டினான். மாடு படுத்துக்கொண்டது. "தடிப்பயல்! எருமைமாடு! மண்டையிலே களிமண்!" என்று அவனை அர்ச்சித்து விட்டு, வழியே வந்த வாடகை வண்டியை அமர்த்திக்கொண்டு கடைக்குப் போனார். வண்டிக்கு 6 அணா வீண்செலவு! "வாங்கோ செட்டியார்! ஏது ரொம்பக் களைச்சி இளைச்சி வந்திருக்கிறிங்க" என்று வரவேற்றார், செட்டியாருடைய பற்றுவழிக்காரர்.

"ஆமாம்! ரொம்ப அலைச்சாட்டம்தான்" என்றார் செட்டியார்.

"எல்லாம், இப்போ அம்பிகாவிலே போய்க் கூடிப் பேசறானுங்க" என்றார் அவர்.

"யார்" என்று கேட்டுக்கொண்டே செட்டியார் கடைக் குமாஸ்தாவைப் பார்த்தார்; அவன் "பையனைப்" பார்த்தான், பையன், விசிறியை எடுத்துக்கொண்டு ஐயா பக்கத்திலே நின்றுகொண்டு, அவன் வேலையைச் செய்தான், இதற்குள் செட்டியாரின் நண்பர், "யாரா? என்ன செட்டியாரே, தூக்கமா? அந்த மூன்று விலாசமும், வந்தாச்சே" என்றார். "கோயமுத்தூரா? சேலமா?" என்று செட்டியார் கேட்டார். "சேலத்தானுங்கதான்" என்றார் அவர். "அம்பிகாவிலே என்ன" என்று. கேட்டார் செட்டியார். "அம்பிகா-

17