பக்கம்:ஜெபமாலை முதலிய 5 சிறுகதைககள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேசி, இவர் குறைச்சல் விலைக்கு வாங்கினதும், பட்ட கடனைத் தீர்க்கப் பண்ணையை விற்கவேண்டிய நிர்ப்பந்தத்திலே சிக்கிக்கொண்ட ஜெமீன்தார் கௌரவத்தைக் காப்பரற்றிக்கொள்ள, பண்ணையை விற்கவேண்டிய அவசியம் ஏற்பட்டதற்குக் காரணம், பாரிஸ் பிரயாணம் என்று புளுகினதும், இடையே பல தரகர்கள் விதவிதமான புளுகு பேசி, பேசிய புளுகுக்கு ஏற்ற விகிதம் பணம் பெற்றதும் தெரியும்! ஆனால், இவை 'புளுகு' என்று உலகம் கூற மறுக்கிறதே! சமர்த்து என்றல்லவா புகழ்கிறது! வேலைக்காரன் என்ன சொல்வான்? இனிமேல் புளுகுவதில்லை என்று வேலாயுதத்துக்குச் சத்தியம் செய்து தருகிறான்.

'இனி ஜாக்ரதையாக இரு' என்று புத்தி கூறிவிட்டு புளுகு பேசினால் அதனாலே நமக்குத்தான் கஷ்டமும் நஷ்டமும் என்பது எப்போதும் உன் கவனித்திலிருக்கவேண்டும்; அதற்காக வேண்டி ஒன்று செய்கிறேன், புளுகிய குற்றத்துக்காக உன் சம்பளத்திலே ஒரு ரூபாய் குறைத்துவிட்டேன். இனி நீ சத்தியத்துக்கு விரோதமில்லாமல் நடந்து வருவதாக எனக்குத் தெரிந்தால் பழைய சம்பளம்" என்று வேலாயுதம் உத்தரவிட்டார். வேணுவுக்கு மாதச் சம்பளம் 15; அதிலே ஒரு ரூபாய் போயிற்று, அவன் புளுகியதால்! எஜமானர் புளுகினால் எத்தனையோ ஆயிரம் இலாபம் கிடைக்கிறது, நாமோ, ஒரு புளுகு பேசினோம்

எஜமானரின் கோபத்திலிருந்து தப்பிக்க அதற்குச் சம்பளத்திலே ஒரு ரூபாய் நஷ்டமாயிற்றே! என்று வேணு விசாரப்படுகிறான் பைத்யக்கார வேணுவுக்குச் சூட்சமம் தெரியாது; புளுகு பேசிப் பிழைப்பது, ஏழைக்கு ஆபத்து; ஆனால், வேலாயுதங்கள் வாழும் முதலாளி உலகிலே, அது அவர்களின் உரிமை! ஏகபோக மிராசு பாத்யதை இருக்கிறது, அவர்களுக்கு, அந்தத் துறையிலே!

28