பக்கம்:ஜெபமாலை முதலிய 5 சிறுகதைககள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்னதானம்


"அவன் பிழைக்கும் வழி, சார் அது" என்ற பேச்சு, சதா என் நண்பனிடமிருந்து பிறக்கும்! கோயில் குளம், கும்பாபிஷேகம் திருவிழா, சடங்கு, சாமியாடல், முதலிய எந்தக் காரியத்துக்கும் அவன் வைத்துவிடும் பொதுப் பெயர், பிழைப்பு. ஆதிலும் அவன் கூறும் கடுமையான மொழிப்படி சொல்கிறேன், வெட்கங்கேட்ட, சுரண்டும் பிழைப்பு!

அவன் பேச்சிலே காரம் அதிகம்; சாரம் இருப்பதாகத்தான் அவன் எண்ணினான், நான் ஒப்புக்கொள்வதில்லை. நான் என்ன அவனைப்போல சூனாமானாவா என்ன? சைவன்! சத்கதா காலட்சேபங்களுக்கு எப்போதும் இடமளித்து வந்த உத்தம குடும்பத்தினன்.

நண்பன் நாகராஜன் சூனாமானாவுடன் ளதற்கும் காரணம் கேட்பது, எதையும் கண்டிப்பது என்ற வழக்கத்தைக் கொண்டான். ஆனால் அவனுடைய கண்டனத்துக்கும் காரணங் காட்டாதிருப்பதில்லை. நான் அவ்வளவாக அவன்

கூறும் காரணங்களைக் கவனித்துக் கேட்பதில்லை. என்ன வேடிக்கை ஐயா இது, நீரும் காரணம் கூறுவதில்லை, அந்தச் சூனாமானா கூறும் காரணத்தையும் கவனித்துக் கேட்பதில்லை என்று கூறுகிறீரே, என்று கேட்பீர்கள். என்ன

31