பக்கம்:ஜெபமாலை முதலிய 5 சிறுகதைககள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செய்வது, எனக்கு நம்பிக்கையைவிட என் நண்பனுடைய வாதம், அவ்வளவு முக்கியமானதாகத் தோன்றவில்லை. அதிலும் சில சமயங்களிலே, நான் எது சிறந்தது, சிலாக்கியமானது என்று முடிவு செய்கிறேனோ, அதே விஷயத்தைக் கேடானது கேவலமானது என்று நாகன் கூறுவான்,எனக்குக் கோபங்கூடத்தான் வரும். வந்து பயன்? விகள் ஒரு சாது; பாவம், தள்ளாடும் நடை,நரைத்த தலை, அடக்கமான பேச்சு, அமரிக்கையான சுபாவம், எங்கள் கிராமத்துக்கு வந்தார். கிராம முக்கியஸ்தர் என்ற முறையிலே, என்னைவந்து பார்த்தார். ஒருவேளை, ஏதோ எங்கள் வீட்டிலுள்ளதைச் சாப்பிட்டார். அவ்வளவுதான்; பணம் கேட்கவில்லை, பட்டுபீதாம்பரம் கேட்கவில்லை, ஒரு தொல்லையும் தரவில்லை. தொல்லை தராதது மட்டுமா! எவ்வளவு அன்பாக நடந்துகொண்டார் தெரியுமோ? தோட்டக்காரன் மகள் படுத்த படுக்கையாகக் கிடந்தாள். அவனும், என்னென்னமோ மருந்து கொடுத்தான். அவன் சலித்தானே தவிர நோய் குறையவில்லை. அன்று, அதாவது 'சாது' எங்கள் வீட்டிலே தங்கியிருந்த, அன்று, அந்தப்பெண்ணுக்கு ஆபத்தாகிவிட்டது. உயிர் போவுதுங்க என்று ஒரு கூச்சலிட்டான் தோட்டக்காரன். என் மனமே பதறிவிட்டது. சாது, ஒரு ஓட்டமாக ஓடினார் அவன் வீட்டுக்கு. ஏதோ விபூதி மந்திரித்துக் கொடுத்தார்; பெண்னுக்குத் தெளிவு பிறந்தது. தோட்டக்காரன் சாதுவின் காலில் விழப்போனான். அவர் அவனைத் தூக்கி நிறுத்தி "அவனைக் கும்பிடு" என்று ஆகாயகத்தைக் காட்டினார்.

சாதுவிடம் எனக்குக் கொஞ்சம் மதிப்பு ஏற்பட்டதிலே ஆச்சரியமுண்டா? அவரிடம் பேசினேன், அவர் சொன்னார், தன இலட்சியத்தை. அதாவது கிராமத்திலே

ஏழைமக்களின் நோய்கொடியைப் போக்கவும், அவர்களுக்-

32