பக்கம்:ஜெபமாலை முதலிய 5 சிறுகதைககள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குப் பேய் பிசாசு முதலியவற்றால் உண்டாகும் கேடுகளைத் தீர்க்கவும் ஒரு ஆசிரமம் ஏற்படுத்த வேண்டுமென்றார். இதிலென்னய்யா மோசம் இருக்கிறது? நாகராஜன் இது கேட்டதும், ஆரம்பித்துவிட்டான் வழக்கப்படி.

"வாங்கோ புண்யாத்மா!" என்று என்னைக் கேலியாக அழைத்தான்.

"போடா துராத்மா!" என்று நானும் திருப்பிக்கொடுத்தேன்,வட்டியுடன்.

"ஆமாம்.யாரது ஒரு மடாத்மா இருக்கிறானாமே உன் வீட்டிலே" என்று கேட்டான் நாகன்.

"துடுக்காகப் பேசாதே நாகா! அந்தச் சாது, யார் ஜோலிக்கும் வருபவரல்ல" என்று நான் கூறினேன்.

"பிரபோ! மன்னிக்கவேண்டும்" என்று கூறினான், மறுபடியும் கேலியாக.

"வேடிக்கை வேண்டாம். அனாவசியமாக அந்த ஆளை மடாத்மா என்று கூறி மனம் நோகச் செய்யாதே. அந்தச் சாது, நமது கிராமத்திலே, ஒரு சேவாசிரமம் ஏற்படுத்தப் போகிறார்" என்று நான் செய்தியைத் தெரிவித்தேன்.

'அவனுக்காக ஒரு சேவாசிரமம் ஏற்படுத்தப் போகிறேன் என்று சொல்" என்று என்னைத் திருத்தினான் நண்பன்.

ஆமாம், அப்படித்தான்," என்று நான் கூறினேன்.

"அதனாலே தான் உன்னைப் புண்யாத்மா என்று நான் அழைத்தேன். இனிமேல் உனக்குப் பட்டம் கிட்டாமலா போகும்? அண்ணனைக் காட்டிக் கொடுத்தவன் ஆழ்வாரானான். இதோ நீ புத்தியைப் பறிகொடுத்துவிட்டுப் புண்யவானாகப் போகிறாய்" என்று நண்பன் கண்டிக்கத் தொடங்-

3

33