பக்கம்:ஜெபமாலை முதலிய 5 சிறுகதைககள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கினான். நான் மேற்கொண்டு பேச்சை ஒட்டவில்லை. எனக்குத்தான் தெரியுமே சூனாமானாவின் சுபாவம்!

"ஏதோ பெரியவர்கள் தேடி வைத்த சொத்தை ஏனப்பா பாழ்படுத்துகிறாய்? உன்னைப்போன்ற பணக்காரரின் பணம் இப்படித்தான் சாது, சன்யாசி, சாமியாடி முதலிய சோம்பேறிகளுக்குப் பாழாகிறது. உழைக்கிறவன் உருமாறிப் போகிறான். இவன் யாரோ ஒரு உருட்டல்காரன். ஏதாவது ஓரிடத்திலே, ஏதாவது அக்ரமம் செய்திருப்பான். அங்கே அடித்து விரட்டி இருப்பார்கள் இங்கே வந்திருக்கிறான் புது மேய்ச்சலுக்கு. வீணாகப் பணத்தைப் பாழாக்காதே" என்று எனக்குப் புத்தி கூறலானான்.

"நாகராஜ் இந்தச் சாதுவைச் சாமான்யமாகக் கருதாதே. இவருக்கு ஆய்சு ஓமம், நவக்கிரக ஜெபம், திலத ஓமம், மார்கண்டஜெபம், கார்கண்டேயஜெபம், காலபயிரவ மூர்த்தி உச்சாடனம், கணபதி ஓமம், கால சாந்தி ஓமம், யாவும் தெரியுமாம்" என்று கூறினேன்."நீ என்ன சொன்னாலும் சரி அவன் ஒரு புரட்டன், சந்தேகமில்லை. இன்று இல்லாவிட்டால் நாளைக்குத் தெரிகிறது. எனக்கென்ன!" என்று கூறிவிட்டுப் போய்விட்டான். ஆஸ்ரமம், அமைப்பது என்று தீர்மானித்துவிட்டேன். அது சம்பந்தமான "நோடீஸ்" போட எங்கள் கிராமத்துக்கு அடுத்திருந்த நகர் சென்று, அங்கு, வெற்றிவேல் பிரஸ் என்ற அச்சகம் போனேன். அந்த அச்சக மேனேஜர், தன் அச்சுக்கூடத்தின் அருமை பெருவைகளைக் கூறலானார். பொறுமையுடன் கேட்டுக்கொண்டேன். தமது அச்சசுத்திலே, வெளியிடப்பட்ட புத்தகங்கள், டிராமா விளம்பரங்கள், கலியாணப் பத்திரங்கள் ஆகிய பலவற்றைக் காட்டினார். சாம்பிளுக்காக இவைகளைத் தைத்து வைத்திருந்தார், பெரிய

34