பக்கம்:ஜெபமாலை முதலிய 5 சிறுகதைககள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராமயணம்போல! அந்தப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்துக்கொண்டே இருந்தேன், நான்கு நோடீசுகள் என் கவனத்தைக் கவர்ந்தன! என் நண்பன் நாகராசனை, என் கண்முன் கொண்டுவந்து நிறுத்தின அந்த நோடீசுகள்! என் கண்களைத் திறந்து, என்னைச் சூனாமானாவாக்கின அந்த கோடீசுகளை இதோ பாருங்கள்:


அன்னதானம்!
தானத்தில் எல்லாம் சிறந்த தானம் எது?
அன்னதானம்!
தருமப்பிரபுக்கள் தலைமுறை தலைமுறையாக செய்யும் தானம்எது?
அன்னதானம்!
மோட்சசாம்ராஜ்யத்தில் முதலிடம் கிடைக்கும் வழி எது?
அன்னதானம்!!!

அப்படிப்பட்ட சிலாக்கியமான அன்னதானத்தைக் கொஞ்சமும் குறைவில்லாத முறையில் பிரதி ஞாயிற்றுக் கிழமைகளிலும், நமது ஊர், சொர்ணவர்ணலேகியக்கம்பெனி சொந்தக்காரர், மகாராஜ ராஜஸ்ரீ சொக்கநாதஞ் செட்டியார் அவர்கள் செய்து வருகிறார். அந்த அன்னதான வைபவத்தின் பெருமையை ஆயிரம் நாவு படைத்த ஆதிசேஷனாலும் எடுத்துச் சொல்ல முடியாது. சீமான் செட்டியாருடைய அன்னதான கைங்கரியத்தைக் காசி முதல் ராமேஸ்வரம் வரையிலுள்ள பக்திமான்கள் கொண்டாடி வருகிறார்கள். ஏழைகள், வயிறார் உண்டு வாயார வாழ்த்துகிறார்கள். இந்த அன்னதானத்துக்காகச் செட்டியார், ஒரு காசுக்கூடவேறொருவரிடமிருந்து வாங்குவதில்லை. எல்லாம் அவருடைய சொந்தச் செலவு ஜெகம் புகழும் அவருடைய சொர்ணவர்ண லேகியம், விற்பதால் கிடைக்கும் வருமானம் அவ்வளவும், அந்த அன்னதானத்துக்கே செலவழிக்கிறார். கலிகாலத்திலே இப்படிப்பட்ட சீமான், பூமான் தோன்றியிருப்பது பகவத் கடாட்சமே.

இப்படிக்கு,
அன்னதானப் பாராட்டு சபையார்
 

வெற்றிவேல் பிரஸ். 3000