பக்கம்:ஜெபமாலை முதலிய 5 சிறுகதைககள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜெபமாலை


"எங்கே என் ஜெபமாலை? ஐயோ! ஜெபமாலையின்றி நான் ஒரு கணமும் உயிர் தரியேனே. என் உயிருக்கு உயிர், ஜெபமாலையல்லவா? என் வாழ்வுக்கு வழிகாட்டி, இருதயத்துக்கு இன்பம், துயர் நீக்கும் துணை, கதியளிக்கும் காவல், ஜெபமாலையாயிற்றே, ஜெபமாலையின்றி நான் எப்படி இருக்கமுடியும்?

என் எதிரே,முத்து, ரத்னம்,தங்கம்,பட்டு, எல்லாம் இருந்தும் என் மனம், ஜெபமாலையையே நாடுகிறது. ஜெபமாலை என்னை ஆட்கொண்டபிறகு, வேறு எதற்கும் நான் அடிபணியமாட்டேன். ஜெபமாலை வேண்டும்! இப்போதும், எப்போதும்! என்னுடனேயே இருந்தாகவேண்டும். கொண்டு வா ஜெபமாலையை."

ஜெபமாலை ஒளிந்திருந்த இடத்திலிருந்தே 'களுக்'கெனச் சிரித்தாள். எவ்வளவு பசுப்புகிறான், என்னென்ன புரட்டுப் பேசுகிறான்; உண்மையா அவனுடைய உரை? இல்லை! உள்ளத்திலிருந்தா வந்தன? கிடையாது; உதட்டளவுதான்! ஏன் ஜெபமாலை ஜெபமாலை என்று உருகுபவன் போல நடிக்கிறான்? இலாபமிருப்பதால்!

ஜெபமாலை, கோபுரநாதன் மகள், ஊரெங்கும் கோபுரநாதனுக்கு மதிப்பு, ஜெபமாலையை மணந்ததால், அந்தக்

3