பக்கம்:ஜெபமாலை முதலிய 5 சிறுகதைககள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடும்பச் செல்வாக்கு, ஆண்டிக்குக் கிடைத்தது. ஆண்டி, வேலை வெட்டி செய்யாமல், பரிமளமாக வாழ்ந்ததே ஜெபமாலையின் தயவினால்தான். ஜெபமாலையுடன் ஆண்டி வாழ்ந்ததால்தான், ஆண்டிக்கு, ஊரிலே, செல்வம், செல்வாக்கு எல்லாம். கண்ணியமும் காணிக்கையும் கிடைக்கும்படி செய்ததாலேயே ஜெபமாலைமீது, ஆண்டி தனக்கு அமோகமான காதல் இருப்பதாகக் கூறினான். ஆண்டியின் மனதுக்குச் சந்தோஷமூட்டுவது, ஜெபமாலையின் 'சிபாரிசு' பெற உதவும்; அந்தச் சிபார்சு, கோபுரநாதனின் உதவியைத் தமக்கு வாங்கித் தரும். ஊரார் ஆண்டியை ஆதரித்ததன் மர்மம் அதுவே. ஆண்டிக்குத் தெரியும் ஜெபமாலையின் அருமை பெருமை, ஆண்டியின் அன்பு' வெறும் வேஷமே தவிர, உண்மையல்ல. ஜெபமாலையின் தயவால் செல்வாக்குப் பெற்றதும், ஆண்டியின் மனம், தங்கத்திடம் தாவும். முத்து, ரத்னம்,பட்டு என்று கண்ட கண்டபுடி இருக்கும், ஆண்டி தேடும் காதல். ஜெபமாலை இதை அறிந்தே நகைத்தாள். ஊராரோ, ஆண்டிக்கு ஜெபமாலையிடம் உள்ள அன்பே அன்பு. தங்கம், முத்து, ரத்னம்,பட்டு, எங்கும் மனதை அலையவிடவில்லை பார், எவ்வளவு உறுதி, உள்ளன்பு என்று பகழ்ந்தனர், பைத்தியக்காரர்கள்! ஜெபமாலையைப் பெற்றுவிட்டால்,பிறகு, ரத்னமும் முத்தும், பட்டும் தங்கமும், ஆண்டியின் அடிதொழ வருகிறார்கள் என்ற தைரியமல்லவா அவனுக்கு. "உங்கள் எதிரே சொல்கிறான், ஜெபமாலையே உயிர் என்று; நீங்கள் போய்விட்டதும், என்னை ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். தங்கத்தின் தளுக்கு, முத்துவின் மோகனப் பார்வை, பட்டுவின் பளபளப்பு-- இவைகளிலே சொக்கிவிடுவான். நான் கிடப்பேன் ஒரு மூலையில், கவனிப்பாரற்று, இதை அறியாமல்,

4