பக்கம்:ஜெபமாலை முதலிய 5 சிறுகதைககள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்னையே அவன் உள்ளன்போடு நேசிக்கிறான் என்று எண்ணி ஏமாறுகிறீர்களே!" என்று ஜெபமாலை எண்ணச் சிரித்தாள்.

ஆண்டி, உள்ளே சென்றான், சிரிப்புச் சத்தத்தைக் கேட்டு.

"ஜெபமாலை! வா! ஏன் தயக்கம்?"

"ஏன் வரவேண்டும்? நயவஞ்சராகிய தங்களிடம்"

"நமக்குள் இருக்கும் தகறாரு பிறகு பார்த்துக்கொள்வோம். நாலுபேர் எதிரே, என்னை அவமானப்படுத்தி விடாதே, வா."

"முடியாது. உன் மோசடிக்கு, நான் எத்தனை காலம் உடந்தையாக இருப்பது? நீ ஊரை ஏய்க்கிறாய், என்மீது அமோகமான அன்பு இருப்பதாகக் கூறி. அவர்களும் நம்பி, உன் அடிபணிகிறார்கள். இந்த நயவஞ்சக நாடகத்துக்குத்தானே நான் பயன்படுகிறேன். என்னிடமா உனக்கு உண்மையிலே அன்பு? ஊரை நீ ஏய்க்கலாம், என்னை ஏமாற்றமுடியுமா?"

"ஜெபமாலை! உன்னால் நான் உயர்வு அடைந்தேன்; உன்னை நம்பித்தான் வாழுகிறேன். உன் அருள் இல்லாவிட்டால், நான் ஊராரால் ஒரு காசுக்கும் மதிக்கப்படத்தான்மாட்டேன், உத்தமகுண ஜெபமாலை! என்னை இந்தச் சமயம், கைவிடலாமா?"

"இப்படிப் பசப்பிக்கொண்டே இருப்பானேன்?"

"பழகிவிட்டேன் அப்படி! என்ன செய்வது?"

"இந்த ‘மோசடி’க்கு நான் உடந்தையாக இருந்தால் கூட இன்னும் நெடு நாளைக்கு உன் காலம் இப்போது உள்ளது போலவே இருக்குமென்று நினைக்காதே!'

5