பக்கம்:ஜெபமாலை முதலிய 5 சிறுகதைககள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"இல்லடி, நான் உங்க கட்சியிலே சேர்ந்துண்டேன். இலை போடு. இந்தப் பக்கத்தாத்துப் பாவி பேச்சைக் கேட்டு உண்ணாவிரதமிருக்கலாமென நினைச்சேன். அவன் என்ன செய்தான் தெரியுமோ? என்னை உண்ணாவிரதம் இருக்கச் சொல்லிவிட்டு, உள்ளே போய் அக்கார வடிசலை வயிறு கிழியச் சாப்டூட்டு,வாசத் திண்ணையிலே படுத்துப் புரள்றான். அவன்தான், பெண்களுக்குச் சொத்து தரலாமோ, சாஸ்திர விரோதமன்னோ, வேதகால ஏற்பாடு பாழாகலாமோன்னு பிதற்றினான். பேஷா தரணும், பெண்களுக்குச் சொத்து. ஐஸ்வரியத்துக்கே, லக்ஷிமி தேவின்னா அதிகாரி. பெண்கள், லக்ஷிமி அம்சமன்னோ, அவாளுக்குச் சொத்து பாதியதை இல்லைன்னு சொல்றது, முட்டாள்தனமன்னோ என்று சர்மா, மசோதாவை ஆதரித்துப் பேசினார்.

"அப்படிச் சொல்லுங்கோ! ஆதி நாட்கள், ஆதி நாட்கள் என்று பேசினா போதுமா? அறிவுக்குச் சரியானதுன்னு தோணினா, அனுசரிக்கத்தானே வேண்டும். இனிமேல், இந்தச் சட்டம் சீக்கிரம் வரணும்னு பேசும்" என்று புத்தி கூறினாள் சகதர்மிணி. "சரி! சாப்டூட்டுப் பேசுவோமே!" என்று காரியத்தைக் கவனப்படுத்தினார்,சர்மா. அந்தச் சாம்பாரும், துகையலும், வத்தலும், உள்ளேபோனால்தான், உறக்கம் வரும். ஆனால், பாவம்! அவர் அழாதது ஒன்று தான் பாக்கி, அம்மையாரின் மொழி கேட்டு, என்ன அது! "இப்போது ஏது,சாதம்? எல்லாம் எதிராத்துக்குக்கொடுத்தாச்சே. பாத்திரத்தைக்கூட அலம்பி ஆயிடுத்தே" என்றாள் அந்த அம்மையார். உள்ளே போய்ப் பார்த்தார். பள பளவெனப் பிரகாசித்தன பாத்திரங்கள். அவரைப் பார்த்துக் கேலியுடன் சிரித்தது.


திராவிடநாடு அச்சகம், காஞ்சிபுரம்