பக்கம்:ஜெபமாலை முதலிய 5 சிறுகதைககள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கக்கண்டு, "அப்பா! இருக்கு!" என்றான். பிறகு சொன்னான், கனவிலே ஜெபமாலை ஒரு பெண்ணாகத் தோன்றித் தன்னிடம் வாதுபுரிந்ததையும், வம்புக்கு நின்றதையும் அதுதான் மேலே இருப்பது.

புது மடத்தாண்டினய மற்றவர் கேலி செய்தனர், பித்தமா உனக்கு, என்று, அவன் மட்டும் கோபத்தோடேயே "கண்டது கனவுதான். ஆனால் ஜெபமாலை பேசமுடியுமானால், என்னைமட்டுமா உங்களை எல்லாம்கூடத்தான், அதே கேள்விகளைக் கேட்டுத் திணறவைக்கும்" என்று சொன்னான். மேலும் சற்று உரத்த குரலிலே சிரித்தனர் பண்டாரங்கள். "டே!புதுமடத்தாண்டி! திருவாவடுதுறை, தருமபுரி, சிருங்கேரி, முதலிய இடங்களிலே கேள்வி கேட்கத் துணிவில்லாத ஜெபமாலை, போயும் போயும், போக்கிடமற்ற நம்மிடமா கேள்வி கேட்கும்? அங்கே அல்லவா, உன் கனவிலே நடந்த காட்சி நடக்கவேண்டும்!" என்றனர்.

"அது சரி! ஆமாம்." என்று கூறிவிட்டுப் படுத்தான் புதுமடத்தாண்டி. ஒரு புதிய பயம் அவனைப் பிடித்துக் கொண்டது. ஜெபமாலை ஒருநாளும் பேசப்போவதில்லை. ஆனால்,ஜனங்களே அதுபோலப் பேச ஆரம்பித்தால், கேள்வி கேட்கத் தொடங்கினால், ஆபத்தாக முடியுமே என்று நினைத்தான். பயம் கொஞ்சநோம்தான் இருந்தது, பிறகு அவனும் மற்றவர்கள் போலவே ஆனால், மனதிற்குள் சொல்லிக் கொண்டான், "அந்தப் பெரிய இடங்களை'க் கேள்விகேட்டு, என்னென்ன செய்யவேண்டுமோ அவைகளைச் செய்து விட்டுிப் பிறகுதானே நம்மைப்போன்றவர்களைக் கேட்க வருவார்கள்; பார்த்துக்கொள்வோம் அப்போது" என்று தூங்கினான் நிம்மதியாக.


8