பக்கம்:ஜெபமாலை முதலிய 5 சிறுகதைககள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"நீ உண்மையிலே கோபுரநாதரிடம் முறையிட்டுக் கொள்வது, மக்களின் கஷ்டத்தைப் போக்குங்கள் என்றா?"

"போ, ஜெபமாலை! என் மானத்தையே வாங்குகிறாய்."

"நான் அறிந்துகொண்ட இந்த உண்மைகளை, ஊரார் தெரிந்துகொண்டால், பிறகு தெரியும் உன் செல்வாக்கு!"

"பயம் காட்டாதே, ஜெபமாலை!"

"பயம் காட்டவில்லை; நானே பயப்படுகிறேன். நீயும் கூடச் சேர்ந்துதானே எங்களை எய்த்தாய் என்று ஊரார் என்னையும் துன்புறுத்துவார்கள் என்று எண்ணிப் பயப்படுகிறேன்."

"போதும் உன்னுடைய வாதம்! வா, ஜெபமாலை! உன்னைப்பெற்ற பிறகு நான் இழக்கத் துளியும் சம்மதியேன், நீ இல்லாவிட்டால், என் கதி என்ன ஆகும்? எனக்கு இப்போதுள்ள உயர்நிலை இருக்குமா பிறகு? ஜெபமாலை! ஜெபமாலை!வா, வா! என்னோடு இரு கைவிடாதே! ஜெபமாலை,வா,வா!"

"ஏ புதுமடத்தாண்டி, என்ன இது, குளறிக்கொட்டறே! ஜெபமாலை ஜெபமாலைன்னு கூச்சலிட்டு எங்க தூக்கத்தையும் பாழ் செய்யறே, என்ன இழவு, கனவு கண்டு கூவினே?"

பக்கத்தில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த பண்டாரங்கள், புது மடத்தாண்டி, தூக்கக் கலக்கத்திலே ஜெபமாலை ஜெபமாலை என்று உளறியது கேட்டு, தட்டி எழுப்பி, என்ன விஷயம் என்று கேட்டனர்.

திடுக்கிட்டு எழுந்த புதுமடத்தாண்டி, முதலிலே தன் திருவோட்டைத் தேடினான். அதிலே, தன் ஜெபமாலை இருக்-

7