பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 101

கொண்ட காதலின் ஆதீதமான உயிர்ச் சக்தியால் ஆட்டிப் படைக்கப்பட்ட ரமி என்கிற ஒரு பாரதப் பெண், தமிழ்ப்பெண், கொண்ட கணவனான சியாம் என்கிற நல்ல கணவரைத் துறந்து, பழங்காதலன் நரேனுடன் இரண்டறக் கலந்து விடத் துடிக்கிறாள் ; அவள் துடிப்பில், பத்தினித் தருமத்தைப் பார்க்கிலும் காதற்தருமம்தான் மே .ே லா ங் கி த் துடிக்கிறது :கேட்கிறீர்களா ?

அன்புள்ள சியா முக்கு,

நான் இவ்விதம் செய்வேன் என்று கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள் இப்படியெல் லாம் எனக்குப் பின்னணியில் ஒரு வாழ்க்கை இருந்ததா என்று கூட நினைத்திருக்க t& Lt: ji Gif , .

நான் உங்களை விட்டு விலகிச் செல்கிறேன். எங்கே போகிறேன், எதற்குப் போகிறேன் என்றெல்லாம் கேட்காதீர்கள். இது என் வாழ்க்கையில் ஒரு விபத்து. என் வாழ்க்கையில் ஏதோ மறைந்திருக்கிறதென்பதை ம ட் டு ம் நீங்கள் புரிந்து கொண்டால் போதும்.

உங்களுடன் வாழ்ந்து விட்டு, உங்களுக்கு அநீதி இழைக்கலாமா என்று என் மனமே என்னைக் கேட்கிறது. அதற்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. நீங்கள் என்னை நேசிக் கிறிர்கள் ; பூரணமாக நம்பியிருக்கிறீர்கள். அந்த நம்பிக்கைக்கு நான் உகந்தவளா என்று நினைக்கும்போது, என் நெஞ்சம் வெடித்து விடு இறது. நீங்க ள் உயர்ந்தவர். உங்களுடன் வாழ்வதையே ஒரு பெண் லட்சிய இன்பமாகக்

ஜெ-7