பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

ராசலீலைகளும் லீலா விநோதங்களும் காதற்கனவின் கனவுக் காதலின் பின் புலத்தில் அப்பொழுது கண்ணா மூச்சி ஆடவும் தவறுவது இல்லைதான் !

காதலில்தான் எத்தனை ரகங்கள், ராகங்கள் ! ஒரு தலைக்காதல். மறுதலைக் காதல். உடற்கவர்ச்சிக் காதல். இப்படிப்பட்ட காதலின் பிரிவுகளில் குறிப்பிடத்தக்க தாகக் குறிக்கப்பெறும் ஆத்மார்த்தக்காதலின், அதாவது, ஆன்ம நேயப் பிணைப்பின் (Platonic love) உருவகச் சித்திரங்களாகவே ஊதாப்பூ நாயகியும் நாயகனும் மின்னுகிறார்கள். மின்னுவதெல்லாம் பொன் அல்லவே!ஆனாலும், நாயக-நாயகிப் பாவங்களில், பாவனைகளில், நாயகனைவிடவும், நாயகியின் மன உணர்வுகள்தாம் இங்கே துல்லியமாகப் பளிச்சிடக் காண்கிறோம் ; கேட்கிறோம் ! அழகான புயல்- ரமி !

ரீமி ஒர் அழகான புயல் வாசனை மிக்கதோர் ஊதாப்பூ ரமி தாலியாக- திருவாக விளங்குபவள் திருஉருவான சீதாப்பிராட்டியே என்பார் கவிச் சக்கரவர்த்தி. அப்படிச் சிறப்பும் செல்வாக்கும் வாய்க்கப் பெற்ற மங்கலத் தாலியைத் தன்னுடைய உள்ளத்தைக் கவர்ந்த இந்தரின் மூலம் தன் கழுத்தில் பூட்டிக்கொள்ள வேண்டுமென்றுதான் ரமி ஆனந்தக் கனவைக் கண்டாள். ஆனால், அவளுக்குத் தாலி கட்டியவரோ சியாம் ! எனினும், அவளால் பழைய காதலன் இந்தரை-நரேன் என்று புதிய பெயரைச் சூட்டித் தட்டித் தடுமாறிய இந்தரை மறக்கமுடியவில்லை. நரேன் எனப்பட்ட இந்தரை நாடித் தேடி ஓடிவிட முடிவு செய்திட வேண்டிய மனச்சூழல் அவளிடை உருவாகிறது : உருவாக்கப்படுகிற தென்தும் சொல்லலாம்.