பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 99

சியாமின் ரமி மனமாற்றம் அடைகிறாள்.

ஆனால், எந்த மாற்றமும் விதியின் கணக்குப் பிரகாரம் கொஞ்சகாலம்தான் நீடிக்கும் போலும் !

மறுபடி சலனம், சபலம்... இத்யாதி ! தனது நன்மைக்காகவும் தனது காதலனான நரேனின் நன்மைக்காகவும் ரமி அவ்வூரைத் துறந்து பம்பாய்க்குப் போய்விடத் தயாரா கிறாள். வெள்ளியன்று ரயில் நிலையத்தில் சந்திக்குமாறு வேண்டிக் கடிதம் அனுப்புகிறாள் : “கடைசி முறையாக என் கண்களால் உங்களைப் பார்க்க விரும்புகிறேன் !”

அன்று வெள்ளியன்று ரயில் நிலையத்துக்கு ஒடோடி வருகிறான் நரேன்.

ஆனால்அதற்குள் : ரயில் வண்டி புறப்பட்டுவிடுகிறது !. நரேனின் கண்களுக்கு மட்டும் அந்த ஊதாப்பூ கண் சிமிட்டுவது தெரிகிறது !

இப்போது, நரேன் புது மனிதன் ஆகிறான் ! கதை முடிகிறது ! > - இந்தக் கதை முடியும் போது, கத்தரிக்காய் காய்க்காது ! -

காய்க்காத கண்ணிர்த்துளிகள் தாம் காய்ப்பேறிக் காட்சி தரும், தரிசனமும் தரும் ! காதற் கனவுகளில் ஊதாப்பூ

அழகான கனவுக்குக் காதலை ஒப்புவமையாக்கி நான் எண்ணிப் பார்ப்பது வழக்கம் : வழக்கமான காதலில்