பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

ஒருநாள் இல்லறம் வாழ வேண்டும் !... ஒரே ஒருநாள் கணவன்-மனைவி போல் நாம் வா வேண்டும். அதுபோதும். அந்த நினைவிலேயே வாழ்வைக் கழித்து விடுவேன்!'அவளைக் கையால் கூடத் தொடுவதில்லையென்று அவன் சத்தியம் செய்து கொடுக்கிறான் .

ரமியும் நரேனும் அவ்வாறே ஒரு நாள் கணவன்-மனைவியாக வாழ்கிறார்கள் !

பின் :

வாழ்வின் விதிச் சிரிப்பிலே சிந்தும் சிற்றலை களாகச் சடலங்கள், சலனங்கள். தாகதாபங்கள், முரண்நிலை ஆசாபாசங்கள் :- இருவருமே அல்லாடுகிறார்கள் ; த ள் ளா டு கி றார் க ள் ; தடுமாறுகிறார்கள் ; தத்தளிக்கிறார்கள்.

ரமியை நரேன் தன் வாழ்நாளிலே ஒரு போதும் மறக்கமாட்டான். மறக்கவும் முடியாது; மறக்கவும் கூடாதுதான்.

அதே நிலையில் ரமியும் தவிக்கிறாள். என் வாழ்க்கையின் பந்தங்களை விடுவித்துக்கொண்டு, உங்களை வந்து அடைகிறேன். இருவரும் எங்கே யாவது தூரத்தில், எங்கேயாவது போய் நிம்மதி யாக வாழ வேண்டும் !” என்கிறாள். அதற்காக நடவடிக்கைகளையும் மேற் கொள்கிறாள். கணவர் சியாமுக்குக் கடிதம் எழுதி வைக்க, அவர் அதைப் படித்த கையோடு, அவளை எதிர் பாராமல் சந்திக்க நேருகிறது. “அமைதியுடன் போய் வா !” என்று விடை கொடுக்கிறார் சியாம்- ரமியின் சியாம்.