பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 97

ஆமாம் ; ரமியின் ஒரு பார்வைக்காக ஒற்றைக் காலில் தவம் இயற்றி, காதல் நோன்பை யும் இயற்றிக் காத்திருக்கிறான் நரேன்.

ரமியும் நரேனும் சந்திக்கிறார்கள்.

ஆனால், ரமி அவனுடன் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

மனம் ஒடிகிறான் அவன்.

அவளது உதாசீனம் அவனைக் கொல்லாமல் கொல்கிறது.

மறு சந்திப்பில், ரமி சொல்வாள் : நரேன் ! தான் வேறு ஒருவரை ஏற்றுக் கொண்டாகி விட்டது. இனி மாறுபட வழியில்லை ; இது எனக்குத் தெரியும். ஆனால், அதே சமயத்தில் உங்கள் நினைவு என் மனத்தில் ஒரே சீராக ஊடுருவி விட்டது. அதைக் களைந்து எடுப்பது முடியாத காரியம். இந்த ஜன்மத்தில் முடியாது. உங்கள் நிழலைப் பார்த்தால்கூட, என் நினைவுகள் கிளர்ந்துவிடும். என் மனம் அவ்வளவு மெல்லியது. உங்கள் நினைவு அலைபாய்ந்து வருவதை என்னால் தடுக்க முடியாது. ஆகவே, உங்களைப் பார்க்காமல் இருக்க வேண்டுமென்று

அவன் கவலைப்பட்ட மாதிரி, அவள் தன்னைக் கேவலமாக நினைக்கமாட்டாள் என்பதை அறிந்து, அவன் மனம் அமைதியில் நெகிழ்கிறது.

இந்நிலையில் : -

ரமியிடம் நரேன் வரம் ஒன்றைக் கேட் கிறான் : ரமி ! நீ என்னுடன் ஒருநாள். ஒரே