பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

முடிவில், கொலை, ஊதாப்பூவாக விதியின் வினை வடிவிலும் வினையின் விதி உருவிலும் விளையாட்டுக் காட்டுகிறது.

இந்தர் கொலைகாரன் ஆகிறான்.

கொலையுண்டவன் சசி.

ரமிக்காகக் கனாக் கண்டவனுக்குச் சிறைக் கதவுகள் திறக்கின்றன ; மூடிக் கொண்டுவிடு கின்றன ! ஒரு கட்டத்தில், மூடிக்கொண்ட கதவுகள் திறந்து கொள்கின்றன !

ஆனால், அங்கே ரமி- அதாவது, இந்தர் இதய பூர்வமாக நேசித்த ரமி அப்போது வேறொருவரது சொத்தாக ஆகிவிட்டிருந்தாள் !

அல்லும் பகலும் தன்னுடையவளாக ரம்யாவை நினைந்து நினைந்து, ஆறு ஆண்டு களைக் கொட்டடியில் கழித்து, ஒர் இனிய காலைப் போதில் சுதந்தர வானம்பாடியென விடுதலை அடைகிறான் இந்தர். .

இந்தர், நரேன் ஆகிறான் !

ஆனால், அங்கே தன்னுடைய ரமி அப்போது மாற்றான் தோட்டத்து முல்லையாக மலர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருந்த அதிர்ச்சியைத் தாங்கவும் முடியாமல், தாளவும் மாட்டாமல் நரேன் தவிக்கிறான். ... . . . . . . . . . . . . . .

எப்படியோ, மறுபடி அவளைச் சந்திக்கிற வாய்ப்பு அல்லது வசதியை ஏற்படுத்தித் தரு. கிறது விதி.

விதி பொல்லாதது: