பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 95

புஷ்பா தங்கத்துரை உருவாக்கித் தயாரித்துள்ள இந்த ஊதாப்பூவில், கண் சிமிட்டுகின்ற இந்த ஊதாப பூவில், அழகும் உண்டு : அழகுக்கேற்ற சுகந்தமும் உண்டு.

மறுமலர்ச்சித் தமிழின் படைப்பிலக்கியம் இன்று திசை மாறி, பண்பு மாறி எங்கேயோ போய்க் கொன் டிருக்கிறது என்னும் உண்மையை- உண்மையின் நிலையைச் சமுதாயப் பொறுப்பும் சமூகப் பிரச்சினையும் கொண்ட பத்திரிகைக்காரர்கள் ஆகட்டும், சமுதாயத்தின் நெறிமுறையான ஆரோக்கிய வளர்ச்சியில் நா.--சி கொண்ட வாசகர்கள் ஆகட்டும், அத்துணை லகுவில் மறந்துவிட முடியாது , மறுத்துவிடவும் முடியாது!

இவ்வுண்மையின் சத்தியத்தை உணர்ந்து கொண்டால் தான், புரிந்து கொண்டால்தான், ஊதாப்பூவின் கதை காரணத்தையும் நீங்கள் அதே சத்தியக் கோட்டில் நின்று உணர்ந்து கொள்ள முடியும், புரிந்து கொள்ளவும் முடியும் !

ஊதாப்பூவின் கதை சாதாரணம் :- வெகு சாதாரனம் !

இந்தரும் சசியும் நெருங்கிப் பழகிய பொறி யியல் மாணவர்கள் ; விதிப்பொறியாகவே அவர் கள் மத்தியில் ரமி தோன்றுகிறாள் பாவேந்தர் பாடினதற்கொப்ப, ரம்யா என்னும் ரமி அழகின் - “ 63

அழகிலே, போட்டி உதிக்கிறது :

போட்டியில், பொறாமை கண் சிமிட்டு கிறது.

பொறாமையின் கண் சிமிட்டலில் சவால் விளையாடுகிறது ; விதியும் விளையாடுகிறது.