பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

தாளராகக் கூடு விட்டுக் கூடு பாய்ந்து, கூத்தாட வில்லையா ? கூத்தடிக்கவில்லையா ?

“சுவர்க்கம- சுகம்- சுநீதா’ என்னும் புஷ்பாதங்க துரையின் நவீனத்துக்கு மணியன் ஆசிரியரான திரு மணியன் அருளிய முன்னுரையில் கீழ்க்கண்ட பாராட்டுக் களையும் அருளி யுள்ளார் : “திருவரங்கன் உலா'போன்ற சரித்திர நாவல்களை எழுதும் ஸ்ரீவேனுகோபாலனும், “இளமைக்கு ஒரு விசா போன்ற நியூ வேவ் நாவல்களை எழுதும் புஷ்பா தங்கத்துரையும் ஒருவரேதான் என்பதை நம்புவது மிகவும் சிரமம். அப்படித் தன்னை இருவிதங் களிலும் வெற்றி பெறச் செய்து கொண்டிருப்பதே அவருடைய சாமர்த்தியத்துக்கும் ஒரு சான்று “ --

பொய் அல்ல :- மணியன் பொய் சொல்லமாட்டார்!

புஷ்பா தங்கத்துரை சர்வ நிச்சயமாகச் சாமர்த்தியக் காரர் தான் :- இல்லாவிட்டால், இளைய பாரத சமுதா யத்தை இப்படி ஆட்டிப்படைத்து அலைக்கழித்துத் திசை திருப்பிவிட்டு, அந்தத் திருப்பத்தின் சந்நிதியில் தன்னு டைய அற்பப்புகழை வளர்த்துக் கொள்ளத் துணிந்திருக்க மாட்டார் !

கண் சிமிட்டும் ஊதாப் பூ !

ஊதாப்பூ கண் சிமிட்டும் !... இது ஒன்றும் ஒன்பதாவது பத்தாவது உலக அதிசயம் அல்லதான் !

என்றாலும் ;