பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 93

புனிதம் மண்டிய தமிழ்ப் படைப்பிலக்கியத்தைப் புனிதம் காத்துப் பொற்புமேவப் பேணிக்காத்து வாழ்த்தி வாழவைத்த தமிழ்ச் சமூகக் காவலர்களின் இலட்சியக் கனவுகளையெல்லாம் தங்களுடைய சுய நலம் கொண்ட வயிற்றுப் பிழைப்புக்காகவும், குறுக்கு வழிப் புத்தி படைத்த அற்பப் பேருக்காகவும் அவசரப் புகழுக்காகவும் பாழ்படுத்தி வருகின்ற வெறும் நாலு பேர் அடங்கிய நாசகாரக் கும்பலில் பண்பட்ட எழுத்தாளரான பூர்வேணு கோபாலன், பண்புகெட்ட எழுத்தாளர் புஷ்பா தங்க(த்) துரையாக இடம் பெற்றது, இடத்தை பிடித்துக் கொண்டது அவருடைய துர்ப்பாக்கியம் என்றே சொல்ல வேண்டும், வாழ்க்கையைச் சோதிப்பதாகச் சொல்லி, இளைய பாரதச் சமுதாயத்தினரைச் சோதித்தசோதிக்கும் இந்தச் சமூக விரோதிகளில், சுஜாதா என்கிற ரங்கராஜனுக்கு அடுத்த படியாகவே, புஷ்பா தங்க (த்? துரை என்னும்படியான பூர் வேணுகோபாலன் இடம் பெறுவார்.

சமுதாயம் என்பது வெறும் நாலே நாலு பேர் மாத்திரமே தான் என்கிற பூனைக்கண் மயக்கத்தில், பிரமையில், அசட்டுத் தைரியத்தில், அநியாயப்பாவத்தில் மனச் சூது கவ்வப் பேனாவைக் கவ்வித் திரியும் இக் கும்பலில் மூன்றாவது இடம் இந்துமதிக்கும் நான்காவது இடம் சிவசங்கரிக்கும் உரிமதாகவும் கருதலாம் !இதுவே தார்மிக நியாயமெனவும் அந்த வட்டாரப் புள்ளி களிடையே ஒரு பேச்சு சலசலப்பதும் பொய்யாக இருக்க முடியாது !

விக்கிரமாதித்தன் யுகத்திலேதான் கூடுவிட்டுக் கூடு: பாயும் சித்து விளையாட்டு நடைபெற்றதா ?

இல்லை !

இதோ, இங்கே, யூரீவேணுகோபாலன் என்கிற நல்ல எழுத்தாளர், புஷ்பாதங்கதுரை என்கிற பொல்லா எழுத்.