பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 105

கோபாலன் தான் என்னுடைய திறனாய்வுக் கண்களில் மின்னுகிறார்!-கதையின் தொனியில் (tone) ஒரு சமுதாய வாதியின் பொறுப்பு ஒலிக்கிறது; எதிரொலிக்கிறது,

‘சுவர்ணமுகி படைப்பாளர் தான் ட்விங்கிளத்தன” என்று நொடிக்கு நூறு தரம் இங்கே எழுதியிருக்கிறார்:என்ன பொருள், புஷ்பா?-என்ன அர்த்தமாம், தங்கதுரை?...

ஊதாப்பூ நல்ல ஜவ்வு மிட்டாய், போங்கள்!

தமிழ்ச் சாதிக்குத் தேவை!...

வெவ்வேறு சூழ்நிலைகளில் தங்கள் கற்பை இழந்து, பொது மகளிராகவும் இரு மனப் பெண்டிராகவும் மாறிய சிவப்புப் பெண்களின் நடைமுறை வாழ்வுக் கதைகளை சிவப்பும் பச்சையும் மஞ்சளுமாகப் பின்னிய புஷ்பா தங்கத்துரையின் சாயலிலே ஊதாப்பூவும் கண் சிமிட்டுவது இயற்கைக்கு விரோதமானதென்று சொல் வதற்கில்லை! அது அவருக்கு அதாவது, புஷ்பா தங்க துரைக்கு ஆகிவந்த கலை; அது மஞ்சள் இலக்கியப் பணியின் பண்பாடிழந்த செக்ஸ்’ கலா விநோதமும் கூட:

இருப்பதைச் சொல்வது கலை.

...’ இருக்கவேண்டியதைச் சொல்ல வேண்டியதும் கலை தான். -- - - -

ஆனால், சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை’ என்னும் பாமர ரஞ்சகம்ானதொரு முதுமொழியைப் பொய்யாக்க நினைத்து, சொல்லித் தெரிவதுதான் மன்மதக்கலை என்கிற புதிய வாய்ப்பாடு ஒன்றை உரு வாக்கி வருகிற சுஜாதா கும்பலில் ஸ்ரீ வேணுகோபாலனும் கூட்டுச் சேர வேண்டுமா?

சோற்றில் சுவர்க்கம் இருக்கட்டும்!