பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

ஆனால், சேற்றில் சுவர்க்கத்தைக் காட்டுவது தருமமா?-மனிதாபிமானத் தருமமா இது ?

சொல்லுங்கள் !

ஓ! சொல்லமாட்டீர்களா ?

சரி.

நான் சொல்லட்டுமா ?

நீங்கள் ஊதாப்பூவில் இடைச் செருகலாக அள்ளி அனைத்துத் திணித்துத் திக்குமுக்காடியிருக்கிற ஸ்வப்நா’ ஒரு வேசி தாசி இளம் பிள்ளைகளுக்கு இளம் பிள்ளை வாதம் ஏற்படச் செய்யவென்றே ஸ்வப்நாவை அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள் :

ஸ்வப்தா பேசுகிறாள் :

“...அன்று காந்த் என்னிடம் அகப்பட்டுக் கொண் டார். ஒரே அறையில் தங்கினோம். அவர் கூச்சம் மிகுந்தவர். வெளியே படுக்க விரும்பினார். ஆனால், வராந்தாவெல்லாம் மழை நீர். படுக்க முடியவில்லை: உள்ளே படுத்தார். நான் அவரிடம் பேசினேன். பேசிக் கொண்டேயிருந்தேன். பேச்சுக்கிடையே, ஏதோ கடிக் கிறது என்று கூறி, வேண்டுமென்றே விளக்கைப் போட்டு, பாதி திறந்திருந்த என் மேல் உடம்பைக் காட்டினேன். ஒரு தரமல்ல; பல தடவை விளக்கைப் போட்டு உடம்பை வெவ்வேறு கோணங்களில் காட்டினேன். கடைசியில், ஒரு காலைத் தூக்கி அவர் கட்டிலில் மீது வைத்து, பூச்சிக் கடிகளால் சிவந்துபோன பகுதி என்று சொல்லிச் சில இடங்களைக் காட்டினேன்...”

சே!.