பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 109

பாசமும் நேசமும் தருமமும், பரிவும் சோதிக் கின்ற சோதிப்பு முறைக்கும் இடையிலே, அல்லற் பட்டு அவதிப்படும் மனிதனுக்கு, சராசரி மனித னுக்கு, நடைமுறை உலகின் பாற்பட்ட மனித னுக்குக் கண்ணால் காண முடியாத கடவுளும் நெஞ்சால் உணர முடிந்த காதலும் ஒன்றாகத் தோன்றுவது இயற்கை மாத்திரம் அல்ல, நியாய மும் கூடத்தான்!... எல்லை சொல்ல இடம் தரும் பிறப்புக்கும், முடிவு கட்ட முடியாத இறப்புக்கும் இடைப்பட்டு, முன்னைப் பழவினையின் மறக் கருணையினால் அமைத்துக் கொடுக்கப்படுகின்ற. ஒரு கனவுக் காட்சி போன்றதான இந்த மண் வாழ்க்கையிலே கண்களை மூடிக்கொண்டிருக்கும் வரையிலும் காதல் ஒர் இனிதான, எழிலான கனவாகவேதான் காட்சியளிக்கும்!- கண்களைத் திறந்து விட்டாலோ, கடவுள் மாதிரியே, காத

லும் காணாமலே போய் விடும்!...”

இருபது ஆண்டுகளைக் கழித்து இன்றைக்குப் படிக்கும் போது, மேலே கண்ட என்னுடைய இந்தச் சிந்தனைகள், புதிய அலை ஆர்ப்பரிக்கின்ற இன்றைய நாகரிக யுகத்திலும் யதார்த்தமான பொருத்தம் கொண் டிருப்பதாகவே நான் உணர்கிறேன்!-அவ்வுணர்விலே, காதலும் கடவுளும் சிரிக்கின்ற அந்த மாயப் புதிர்ச் சிரிப் பையும் என்னால் உணர முடிகிறது!

புனிதமான காதலுக்கு இன்று என்னென்னவோ முரண்பட்ட அர்த்தங்களும் அனர்த்தங்களும் சொல்லப் பட்டு வருகின்றன!-இப்படிப்பட்ட புண்ணியத்தைக் கட்டிக் கொண்டு திரிகின்ற சமூக விரோதப் புல்லுருவி எழுத்தாளர்-எழுத்தாளிகளிலே, இந்துமதிக்கு நிச்சய மாக மூன்றாவது இடத்தைக் கொடுத்துவிடத்தான் வேண்டும்!-சமுதாயத்தின் இளம்பருவத்தினரை அடுத்துக்