பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

யின் சளி, ஒரு பொய்ப் பித்தலாட்டமான சொந்தத் தத்துவம் ஒன்றைப் பொதுவுடைமைச் சித்தாந்தமாக்க முயற்சி செய்யும் பயங்கரத்தைக் கேளுங்கள் : “மனசிலே

இடம் கொடுத்தபின், வெறும் உடம்பு என்ன பெரிய

விஷயம், சாந்தி ?” தோழிப் பெண்ணான சாந்தியிடம்,

அன்றொரு நாள். வாடகைப் பெண்ணாக மாறு வேடம்’

புனையத் தீர்மானம் செய்தபின் கூறிய சஸியின் இந்தக் கூற்றில் ஒர் அசல் வேசியின் நிழலைத்தானே நாம் தரிசிக்க முடிகிறது ?- இங்கே, இந்தச் சளி சமூகத் துரோகச் சக்தி யாகவும், சமுதாயத்தின் விரோதச் சக்தியாகவும் உருவாகி,

அல்லது, உருவாக்கப்பட்டு, இவளும் ஒரு 429 ஆகி

அல்லது, ஆக்கப்பட்டு, அசல் தாசியாக அரங்கேறவும்

தலைப்படவில்லையா? இங்கேதான், சஸியின் குணச்

சித்திரம், குணம் கெட்டு, தரம் தவறி, பண்பு தடுமாறி,

கற்பு மனமொப்பி மானமிழந்து, வாடகைக்கு விடப்

பட்டு, சளி என்னும் இந்தப் பெண், சஸி என்கிற இரு

மனப் பெண்ணாக உருமாறவும் நேர்கிறது!-இந்நிலை

யில், அதாவது, மனத்திலே ஒருவருக்கு இடம் கொடுத்த

பின், வெறும் உடம்பைப்பற்றிலவலேசமும் அக்கறையோ,

அனுதாபமோ அல்லது, கவலையோ கொள்ளாத இந்தச்

சளி நமது தமிழ்ச் சமுதாயத்துக்கு அறிவிக்கின்ற சேதி

[Social messageJ “a-i-rat Grbrug, Gsuspio estauia”

என்பதாகத் தானே இருக்க முடியும் ?-இளைய தலை

முறையினரைத் தடம் புரண்டு திசைமாறச் செய்திட

(demoralize) முனைந்த சளி மாத்திரமல்லாமல், சளியை உருவாக்கித் தயாரித்த இந்துமதியும் சமூகக் குற்றவாளி

யாக இப்பொழுது ஆகிவிடவில்லையா, என்ன?

சீர்திருந்தும் குறைபாடுகள்

தமிழ்ப் பல்கலைக்கழகங்கள் சிலவற்றில் முன்னம் ஆராய்ச்சித்துறை மாணவ மாணவியர்க்கு ஆய்வுக் குறிப்பு நூலாகப் பரித்துர்ை செய்யப்பட்ட கல்கி முதல் அகிலன் வரை’ என்ற என்னுடைய இலக்கியத் திறனாய்வு