பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 113

நூலில் நான் குறித்திருந்த விவரம் இந்நேரத்தில் குறிக்கத் தக்க விவரமாகவே அமைகிறது :

சமுதாயத்தின் குறைபாடுகளை அம்பலப்படுத்தும் முயற்சியைச் சமூகச் சீர்திருத்தப் பிரக்ஞையுள்ள அனைவரும் வரவேற்கவே செய்வார்கள் : இப்படிப்பட்ட கமூக நலப் பணி முறைகளில் செயலாற்ற முனையும் இலக்கியப் படைப்பாளர்கள் சமூக நலப் பண்பையும் பண்பாட்டையும் தலையாய கடமையாக மனத்தில் கொண்டு செயற்படுவதும் அவசியம் ஆகிறது. இந்நிலை பக்குவமாகப் பேணிக் காக்கப் படுவதும் முக்கியம் ஆகிறது :- அப்போதுதான், மனித மனங்கள் நெறி முறையுடன் பேணிப் பாதுகாக்கப்படவும், அதன் நல்ல விளைவாக இந்தத் தமிழ்ச் சமுதாயம் நெறிமுறையோடு திருத்தமும் சீர்திருத்தமும் பெறவும் வாய்ப்பு வசதி உண்டாகும் ; உண்டாக்கப்படும் !’

இந்த எல்லைக் கோட்டில் நின்று, இந்துமதியின் சளியை நிறுவை செய்யும் போது. சளி, அதாவது, ‘மணல் வீடுகள் கதையின் நாயகியான சளி என்னும் வேசி எடைத்தட்டிலேயே தங்க மறுத்து விடுகிறாளே 2மேலும், சமுதாயக் குறைபாடுகளை அம்பலப்படுத்தும் போது, சமுதாயம் நலம் பெறுவதற்கான உபாயங்களைப் பளிச்சிடச் செய்ய வேண்டியதும் படைப்பாளியின் தார்மீகக் கடனாகவும் அமைய வேண்டும் அல்லவா ?இந்நிலையைச் சோதித்தால், பரிசோதித்தால், சமுதாய நலப்பார்வை கெட்ட சளி தமிழின் எல்லையை மறந்தும் துறந்தும் எங்கேயோ தூக்கி எறியப்பட்டுவிடுகிறாளே ? இயல்பு பிறழ்ந்த இயல்புடைய புவனா, க்ருப்ா மற்றும் சஸி ஆகிய மூன்று பேருமே இந்துமதியின் மணல் வீடுகள்’ கதையில் நம்ப முடியாத பாத்திரங்களாக (Abaormal Characters) மட்டுமல்லாமல், தம்பிக்கைக்குப் பாத்திர மற்ற, தமிழ்ப் பண்பற்ற பாத்திரங்களிாகவும் காட்சி தருகின்றனர் !