பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 115

இந்த நடைமுறைத் தத்துவத்தை சஸியின் இந்துமதி ஏற்றுக்கொண்டால்தானே, இந்துமதியின் சஸி ஏற்றுக் கொள்வாள், பாவம் !

பாவம், சளி !...

வேசி நாயகி சளியை ஆராய்ந்தால், இன்னோர் உண்மையையும் மணல் வீடுகள்’ தெரியப்படுத்தக் கூடும் !- இந்துமதியின் சஸி நமது அருமைச் சமுதாயத் திற்குத் தெரியப்படுத்தும்,நீதிபோதனை (moral.judgement) என்ன, தெரிகின்றதா ? எந்தக் கன்னித் தமிழச்சியும், தமிழச்சிக் கன்னியும் தன் இஷ்டம் போலவும் இஷ்டப் படியும் சோரம் போகலாம், விபசாரம் செய்யலாம் என்பதாகத்தானே இருக்க முடியும் ?- அரசின் விபசாரத் தடைச் சட்டத்தின் கீழ், மணல் வீடுகள் கதையில் சவி என்னும் தாசி ஒருத்தியை உருவகப்படுத்திய இந்த எழுத்துச் சகோதரியை அதே விதியின்படி ஏன் கைது செய்யக் கூடாதாம் ?- பாவம், சகோதரி - இன்னமும் அதே சமுதாயத்தின் அதே குற்றவாளிக் கூண்டிலேயே கால் கடுக்க நின்றுகொண்டேயிருக்கிறார்!-indhu, erase me please ? - -:

இந்நிலையிலே

‘மணல் வீடுகள் படைத்த சகோதரி அக்கதையின் முன்னுரையாகப் பேசுவதாவது. “இது ஒரு வித்தியாச மான கதை. முரண்பாடான வாழ்க்கை. இந்த முரண் பாட்டை ஏற்றுக்கொள்ளாமல் நிறையப்பேர் இருக்கலாம். ஆனாலும், முரண்பாடுகள் தவிர்க்க முடியாதவைகள் வாழ்க்கையை விட்டு விலக்க முடியாதவைகள் ; விலக்க முடியாதவைகளோடு கைகுலுக்குவதைத் தவிர வேறு வழி இல்லை. இதைப் புரிந்து கொண்டு, தன் உதட்டின் சிரிப்பு மாறாமல் கை குலுக்குகிறாள்.ஒரு பெண்தான் சஸி சவி என்கிற இந்தப் பெயர் நிஜமில்லை. ஆனால், அவள்