பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

மட்டும் நிஜம். ந்த நிஜம், எழுதுகிற வசதிக்காக, சில சின்ன மாற்றங்களோடு இங்கே கதையாகிறது.

சமூகத்தின் குற்றக் கூண்டிலே இன்னமும் இந்துமதி நின்று கொண்டிருப்பதற்கு, அல்லது, இன்னமும் கூட நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதற்கான காரண காரியம் இப்போது உங்கட்கெல்லாம் நிச்சயம் புரிந்திருக்கத்தான் வேண்டும் !

ஆமாம் : சஸி என்னும் ஒரு செக்ஸ் வேசியையே நியாயப்படுத்த முன் வந்ததால்தானே இந்துமதிக்கு. இப்படிப்பட்ட பரிதாபமான நிலை ஏற்பட்டது ?

ஒன்றைமட்டும் மறுபடி நான் சொல்லித்தான் தீர வேண்டும் :- ஒரு கதாசிரியரோ, அல்லது ஒரு கதாசிரியையோ படைக்கின்ற படைப்புக்களை இனம் கண்டால், அப்படைப்புக்களின் ஆசிரியரை அல்லது ஆசிரியையே இனம் கண்டு கொள்ள முடியும் i-நூலைப் போலத்தான் சேலை :- பொய் இல்லைதான் ! -

வாழ்க்கை நிலைப்பதில்லை.

மண்ணில் ஆரம்பமாகின்ற மண் வாழ்க்கை, மண்ணி லேயே முடிகிறது : முடிவடைகிறது.

- கொண்டாடப்படும் போதுதான், குழந்தையும் தெய்வமும் கொண்டாட்டம் அடையும். * . . .

மேலே கண்ட குழந்தையும் தெய்வமும் ஒன்றில் இரண்டாக ஒன்றியும், இரண்டில் ஒன்றாகப் பிரிந்தும் விளையாடும் போதோ, அல்லது விளையாட்டுக் காட்டும் போதோ, சிருஷ்டியும் சிருஷ்டி ரகசியமும் விளையாடத் தலைப்படும் ; ஏன், விளையாட்டுக் காட்டவும் தலைப்

பட்டுவிடும்.