பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 117

இதுவே, பொய்யான மண் வாழ்க்கையின் சிதம்பர ரகசியம் ஆகிறது!

ஆனால் :

தெய்வத்தைப் பிரிந்து, அல்லது, தெய்வத்தைப் பிரித்து, குழந்தை விளையாடவோ, விளையாட்டுக் காட்டவோ ஆரம்பிக்கும் போதுதான், வாழ்க்கையே ஒரு பிரச்சினையாக உருவாகவும், உருக்காட்டவும் தொடங்கி விடுகிறது:

இவ்வுண்மை நிலைதான், குழந்தையை மையக் கருவாகக் கொண்டு எழுதப்பட்ட மூன்று கதை ஆசிரியை களின் மூன்று கதைகளிலுமே தரிசனம் தருகின்றது.

எழுத்துப் பெண்டிர் மூவர்.

ஒன்று. லக்ஷ்மி-டாக்டர் திரிபுர சுந்தரி லக்சமி:

இரண்டு: இந்துமதி !

மூன்று: சிவசங்கரி !

இம்மூன்று பெயர்களிலும் ஆச்சரியக்குறி நயமாகப் புன்னகை செய்வதை விநயமாகப் பார்த்திருப்பீர்கள்.

இதுவே காரணம்:

லக்ஷ்மி சமூகப் பார்வையுடன் படைத்த அவள் தாயாகிறாள் நீள் கதையும், இந்துமதி விளையாட்டுத் தனமாகக் கட்டின மணல் வீடுகள் புதினமும், சிவசங்கரி சோதனை செய்து தோற்ற ஒரு சிங்கம் முயலாகிறது’ நவீனமும் அதே குழந்தைப் பிரச்னையில் தோன்றினது

ஜெ-8 -