பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




7. உறவைத் தேடும் பறவை :

அனுரிாதா ரமணன் :

அறிமுகம் ஒன்று :

குமுதத்துக்கு மட்டிலுமே உறவு பூண்ட மூன்றெழுத் துக்கள் இவை- எஸ். ஏ. பி. அவர் அன்புக்குகந்த எழுத்துத் தங்கையை அறிமுகம் செய்துவைக்கும் பணியும் முறையும் இங்ஙனம் அமைகிறது: “...இவரது முதற் சிறுகதை 1977ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மங்கை’ இதழில் வெளிவந்தது; 1978ல் ‘இதயம் பேசுகிறது’ பத்திரிகை நடத்திய வாசன் நினைவுச் சிறுகதைப் போட்டியில் இரண்டாவது பரிசாகத் தங்கப் பதக்கம் பெற்றார்; 1980ம் ஆண்டில் ஆனந்த விகடன் பொன் விழாச் சிறுகதைப் போட்டியில் முதற்பரிசாக ரூபாய் பத்தாயிரம் பெற்றார்; ஒவியத்தில் முறைப்படி டிப்ளமா வாங்கியுள்ள இவர் ஒரு பத்திரிகையில் லே-அவுட் ஓவிய ராகவும் பணியாற்றியுள்ளார்; தமிழ்நாட்டில் பல இடங் களிலும் ஓவியக் கண்காட்சி, ரங்கோலி கண்காட்சிகள் நடத்திப் பல பரிசுகள் வாங்கியிருக்கிறார்; இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்!...”

றவைத் தேடும் பறவையான பாலா என்கிற அசல்

தமிழ்க் குலம்பெண்ணை அறிந்து கொள்ளுவதற்கு முன்னதாக, பொது வாழ்க்கையில் பெண் ஒருத்தியின்