பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 121

பொதுவான நிலை என்ன, நிர்ணயம் என்ன என்பதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

பாரதம்-பாகிஸ்தானம் போரின் சூழலை அடிநாத் மாக்கித் தாய்மண் என்ற பெயரில் பெருங்கதை ஒன்றை எழுதினேன் ; அதன் முன்னுரைப் பக்கங்களில், வாழ்க்கை யின் தவநிலை பற்றியும் பெண்ணின் காதல் நிர்ணயம் குறித்தும் சிந்திக்க வேண்டிய சூழல் உருவாயிற்து. இப்படி நான் எண்ணமிட்டேன்:

“...பெண் ஒரு புதிரல்லள் ; அவள் ஒரு புதுமை, தெய்வம் ஒரு புதுமையல்ல ; அது ஒரு புதிர். குழந்தை ஒரு கனவல்ல ; அது ஒரு வாழ்க்கை. அன்பு ஒரு சோதனையல்ல ; அது ஒர் உண்மை. சத்தியம் ஓர் ஆணையன்று ; அது ஒரு தருமம். இலட்சியம் ஓர் எல்லையல்ல ; அது ஒர் ஆன்மா. காதல் ஒரு விளையாட்டு அல்ல ; அது ஒரு சாதனை. வாழ்வு ஒரு பிரச்னையல்ல ; அது ஒர் உன்னதம்...” இன்றையக் கதாசிரியையான அனுராதாவுக்கெனவே அன்றைக்கே நான் இப்படிச் சிந்தித்தேனோ, என்னவோ...? . . . .

பிறவி என்னும் கடனைச் செய்து முடிக்க வேண்டிய மனிதத் தருமத்தின் கட்டுப்பாட்டுக்கு, வாழ்க்கை ஒர் ஆதார பீடமாக அமைகிறது; மனிதாபிமானம் கொண்ட மனித மனம் இவ்வாழ்க்கைக்கு ஒர் ஆதார சுருதியாகக் குரல் கொடுக்கிறது.

இத்தகைய மானுட வாழ்க்கைக்கு உகந்த காலம் குறைவு ; ஆனால், கனவுகளோ கூடுதல். • , ,