பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 123

புனிதத்தின் பாரிஜாதம் அவள்.

அனுராதாவின் அன்புக்கும் பாசத்துக்கும் பரிவுக்கும் அனுதாபத்துக்கும் பாத்திரமாகிறாள் இந்தப் பாலா.

பாலா பட்ட பாடுகள் கொஞ்சமா, தஞ்சமா ?

பாலாவுக்கெனக் காத்திருந்த அக்கினிப் பரீட் சைகள் ஒன்றா, இரண்டா ?

பாலாவுக்கென்றே தவம் கிடந்த போராட்டங்கள் அற்பமா, சொற்பமா ?

பாலா தமிழ்ச்சாதிப் பெண் ; ஆகவேதான், அவள் தன்னை எதிர்கொண்ட சோதனைகள் எல்லாவற்றையும் சமாளித்தாள். -

பாலா ஒரு தமிழச்சி ; எனவேதான், அவன் தமிழ்ப் பண்பு என்னும் பாரம்பரிய நெறிமுறையையே தன் உயிராகவும் தனது உயிர்ப்பாகவும் கொண்டு ஒழுகினாள்.

பாலாவின் கதை சிறிது ; ஆனாலும், அவன் கதையின் சோகம் பெரிது.

உண்மைதான் பாலா நல்லவள் ; நல்ல பெண்மணி.

ஒரு பறவையின் G கதை! - .

2 றவைத் தேடும் பறவையின் கதையை இப்போது நான் சொல்ல வேண்டும்.

கேளுங்கள் :