பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

பாலா வானம்பாடியாகத் தான் பிறக் கிறாள் ; வளர்கிறாள் ; பருவம் அடைகிறாள் ; மன வினையும் வாய்க்கிறது. ஆனால் வாய்த்த மணவினை, மணம் இழந்து, வெறும் வினையாக மாத்திரமே அ வ ைள வாழ்த்த வேண்டிய துர்ப்பாக்கியம் அவளுக்கு விளைகிறது ! அவளுக் குக் கணவனாக வாய்த்த ஜெகன் என்கிற பொல்லாதவன் ஒருவனால் அவளுக்கு வந்த வினைகள்-வாய்த்த கெட்ட பெயர்கள் எத்தனை எத்தனை !

பாவம், பாலா !-அவள் எல்லாப் பெண் களைப் போலவே, ஒரு குழந்தைக்காகவும் ஏங்கு கிறாள். தெய்வம் அவளுக்கு இரங்கவில்லை.

பாலாவுக்கு மருத்துவப்பணிப்பெண் வேலை. அங்கேயும் அவளுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது ; வீட்டிலும் அவளுக்குக் கெட்ட பெயர் உண்டா கிறது :-எல்லாவற்றிற்குமே அவளுக்குக் கணவ னாக வாய்த்த ஜெகன்தான் மூலகாரணம் ஆகிறான்.

ஒரு நாள் : .

கிழவர் ஒருவருக்கு ஊசி போட வேண்டிய பொறுப்பை தலைமை டாக்டர் நர்ஸ் பாலா விடம் ஒப்படைக்கிறார். அப்போதென்று. சனியன் மாதிரி அவளுக்குத் தாலி பூட்டிய ஜெகன் ஒடோடி வந்து நூறு ரூபாய் கேட்கிறான். பாலா வுக்குத் தன் சிநேகிதிகளிடம் கடன் கேட்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படவே, கிழவருக்கு ஊசி போட வேண்டிய பொறுப்பைத் தன் சக நர்ஸ் ஒருத்தியிடம் ஒப்படைக்க வேண்டிய சூழல் உருவாகிறது. அந்தச் சூழலில் விதி சிரிக்க, வினையும் சிரிக்கிறது :- அசல் ஊசி மருந்து