பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

என் திமிருக்கு ஆண்டவன் கொடுக்கிற தண்டனை இது. அதான், கை இருக்கிறப்பவே, முடிஞ்ச அளவுக்குக் கும்பிட்டுடலாம்னு-” விம்முகிறான் ; வெடிக்கிறான்.

பாலாவின் அன்பு அதிர்கிறது ; பாசம் சிலிர்க்கிறது. இது நாள் வரையிலே, அன்பு செலுத்த ஒரு குழந்தை இல்லாத ஏக்கம், இன்று, இந்த முரட்டுக் குழந்தையின் அழுகையிலே கரைந்து விட்டதோ ? அந்தக் கணத்தில், துரை பாண்டியின் பேச்சு, கண்ணிர், அவன் அவளைக் கும்பிட்ட பாவனை எல்லாம் அவள் ம ைத் திற்குள் புகுந்து மந்திரஜாலம் செய்கின்றன ! “துரை, உணர்ச்சி மரத்துட்டா என்ன ? இப்ப மனசு மரத்துப் போகாமல் பார்த்துக்கங்க. நெஞ் சிலே ஈரமும் கனிவும் இருக்கணும். பாசமும் பரிவும் இருக்கணும். அதெல்லாம் இல்லாம, மரத்துப் போயிட்டாத்தான் கஷ்டம், துரை, இனிமே நான் உங்களை வா, போன்னுதான் கூப்பிடப் போறேன். ஏன்னா, அம்மா தன் குழந் தையை மரியாதை கொடுத்துக் கூப்பிட்டதில்லை. இதுவரைக்கும் நீ என் பிள்ளை ; கையில்லாத பிள்ளை. ஆனா, மனசிலே அன்பு இருக்கிற பிள்ளை !” என்கிறாள். - -

பிரமிக்கிறான் துரைப்பாண்டி.

இரண்டு பெண்டாட்டிக்காரனான துரைப் பாண்டி இப்போது நர்ஸ் பாலாவின் அன்புப்

பிள்ளை அல்லவா ?

இனிமேல், பாலா சாவதற்குத் தயாராகவே மாட்டாள் ! - -

ஒருநாள் ஒர் அதிசயம் நிகழ்கிறது.