பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 127

பாலாவின் பணிக் கடனுக்குச் சோதனை யாகவும் சவாலாகவும் அமைந்த பத்தாயிரம் ரூபாய் துரைப் பாண்டி மூலம் அவளைச் சோதிக் கவும் முனைகிறது ; பெறாத மகனின் வற்புறுத்த லால், அவன் தந்த பணத்தைக் கடனாகவே பெற்றுக் கொள்கிறாள்.

திருந்திக் கொண்டிருந்த முரடன் துரைப் பாண்டி அன்புத் தாயான பாலாவின் சொந்தக் கதை முழுவதையும் அறிவான் ; ஆகவே, திருந் தாத, திருத்த முடியாத ஜெகனைப் பற்றித் தீரத் தெளியவே அவன் அறிந்தான்.

ஆனால்...

மாறாததும் மாற்ற முடியாததுமான துல்லிய மான, பரிசுத்தமான, பவித்திரமான, அன்பையும் பாசத்தையும் ஒர் உண்மையான தாயின் உயர் பீடத்தில் இருந்து துரைப் பாண்டிக்கு வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கும் நர்ஸ் பாலாவுக்குதுரைபாண்டியின் அன்னையாம் பாலாவுக்கு இவ் வகையிலும் ஏச்சுக்களும் பேச்சுக்களும் பழிகளும் அபவாதங்களும் வந்து குவிகின்றன. தாலி கட்டின புண்ணியவான் ஜெகனே தாக்கில் நரம் பின்றி, தாலி ஏந்திய ஏந்திழை பாலாவை ஏசிப் பேசவே. அவள் அவ்வீட்டிலிருந்து விடுதலை பெறத் தீர்மானிக்கிறாள். கைகளை இழந்ததால் ஆதரவற்றுப் போயிருந்த துரைப்பாண்டிக்காகச் சிறிய இடமொன்றை தர்ஸ் மேரியின் உதவியால், ஏற்பாடு செய்கிறாள்.

இப்போது துரைப்பாண்டிக்கு நிரந்தரத் தாய்த் துணை, பாலாதான். -

பாலாவிற்கு நிரந்தரமான மகன் துணை துரைப்பாண்டிதான் !