பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

இந்நிலையிலும், அவர்கள் இருவரையும் சமூக விதியும் சமூக வீதிகளும் சும்மா வட்டு வைக்குமா, என்ன ?

பாலாவை ஜெகன் பூச்சாண்டி காட்டு கிறான் !

பாலாவிடமா இந்தச் சம்பமெல்லாம்: சாயும் ?

ஒரு நாள், பாலாவின் மாமியும் ஜெகனின் தாயுமான சிவகாமு அவள் குடும்பத்தினரால் பாலாவிடம் பணம் கேட்க அனுப்பி வைக்கப்படு கிறாள். அங்கே, சிவகாமு அன்பின் மகோ தன்னங்களைத் தரிசிக்கவே, அங்கேயே நிலைத்து விடுகிறாள்.

ஜெகன் பல காலம் கழித்து நொண்டியாகப் பாலாவின் திருச்சந்தியில் சரணடைகிறான். ஆனாலும், அவன் எச்சில் புத்தி அவனை விட வில்லை: பாலாவின் நிழலில் அண்டி ஒண்டும் பாக்கியத்தை விதி அவனுக்கு வழங்க மறுத்து விடு கிறது.

விதவைக் கோலம் ஏந்திய சிவகாமு தன் அருமை மருமகளிடம் சொல்கிறாள் : “இனி மேலும் அவன் ஜெகன் வந்தால், எந்த ஒரு நிலை யிலே இருந்தாலும், இரக்கம் காட்டாதே, பாலா!’ இப்படி ஒரு விஷப் பாம்பைப் பெத்ததுக்காக நான் ரொம்ப வெட்கப்படறேன், அடுத்த பிறவி யிலாவது, கடவுள் எனக்கு நல்ல குழந்தை களைக் கொடுக்கட்டும்...” இந்தக் கடைசி வார்த்தைகளுடன் சிவகாமுவின் உயிர் யாத்திரை யும் கடைசி முற்றுப்புள்ளி ஆகிறது !

இனிமேல், மாமி சிவகாமுவைப் போல் ஓர் உண்மையான உறவைப் பாலா தன் ஆயுசுக்கும் பெறப் போவதில்லை !