பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 129

சோதனைக்கு ஒரு நாயகி :

கதை நிதர்சனம் நிரம்பியது. எதார்த்தம் நிறைந்தது.

சோதனைக்கு ஒரு விதியாகவும், விதிக்கு ஒரு நாயா கவும், வாழ்க்கைக்கு ஒர் அபலையெனவும், அன்பின் பாசத்துக்கு ஒர் அன்னையெனவும் வாழ்ந்த-வாழ்கின்ற பாலா அருமையானதொரு குணச் சித்திரம்.

கரு இன்றேல் தாய் இல்லை.

அது மாதிரி

கரு இல்லையேல், கதை இல்லைதான். இங்கே

அனுராதா ரமணன் சிந்தித்துப் பயனுறப் படைத் துள்ள நீள் கதையில் கருவும் இருக்கிறது. கதையும் இருக் கிறது. இரண்டும் படிப்பவர்களுக்குப் பயனளிப்பதாகவும் அமைந்துள்ளன. இப்பணியில்தான் கதாசிரியையின் சிறப்பும் அச்சிறப்பு அங்கீகரித்துப் பிரகடனப் படுத்தி யுள்ள வெற்றியும் அடங்கியும் உள்ளடங்கியும் உள்ளன என்றும் சொல்லலாம். தமிழ்ச் சமுதாய மக்களுக்கு நல்வழிகாட்டவல்ல கதையின் சிறப்பும் இளைய பாரதச் சமூகத்தினருக்கு அறிவித்துள்ள போதனையின் வெற்றி யும் பாலாவின் ஆளுமையில் ஒற்றைத் தனித் திகிரி’ யெனத் தனித்து நின்று, அனுராதாவிற்கு நியாயமான நல்ல பேரைச் சம்பாதித்துக் கொடுத்திருக்கின்றதென்றும் கூறலாம். உடன் பிறவாத எழுத்துத் தங்கையான அனுராதாவின் இந்தப் படைப்பு எனும் காரியத்துக்கும் பெண்மையின் தாய்மைப் பண்புதான் காரணம் ஆகிறது. காரணம் இல்லாவிடில் காரியம் இருக்க முடியா தென்பது வாதமுறைமை அல்லவா ? தாயைப் போலே பிள்ளை என்டோம் !-அனுராதா முன்மாதிரியான நல்ல அம்மாவாக விளங்குவதால்தான், அனுராதாவின்