பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

படைப்பின் குழந்தையான பாலாவும் நல்ல புதல்வியாக ‘உறவைத் தேடும் பறவை'யில் பளிச்சிட முடிகிறது.

பாலாவை மனம் நெகிழ எண்ணிப் பார்க்கிறேன்!-- திரும்பத் திரும்பத் திரும்பிப் பார் க் கி றே ன் :அவளுடைய தியாக நிழலிலே நெருங்கக் கூட இந்துமதி யின் சளியும் சிவசங்கரியின் மேனகாவும் அருகதை இழந்து, அதோ, கடலே கதி யென்று எங்கேயோ தொலை தூரத்தில் தலை தெறிக்க ஒடிக் கொண்டே யிருக்கிறார்கள் !”...

ஐயமில்லை ! - சிவசங்கரியும் இந்துமதியும் அனு ராதாவைப் போலவே அசல் பெண்கள்தாம் 1-ஆனால், இவ்விரண்டு பேர்களும், அதாவது, இரண்டு பேர்’ என்னும் குமுதமான செக்ஸ் கூட்டுறவுக் கதைத் தயாரிப் பாளர்களான இந்துமதி, சிவசங்கரி எனப்படும் இவ் விரண்டு பேர்களும் கவர்ச்சிகரமாக ஒப்பனை செய்து பொது மக்கள் மத்தியிலே பொதுவுடைமைப் பொம்மை களாக விளையாட விட்டிருக்கின்ற சஸி மற்றும் மேனகா ஆகிய தாசிகளிடம் எஞ்சியும் மிஞ்சியும் கிடக்கின்ற குறிக்கோள் தன்மை (Ideal Self) முரண்பட்ட விபசா ரத்தை தியாயப்படுத்தும் ஈனத்தனமான அநியாயமாகத் தானே அமைந்திருந்தது ?-ஆனால், அனுராதாவின் கதையில் பூவின் மணமாக நிறைந்திருக்கும் குறிக்கோள் தன்மையில், உன்னதம் பெற்ற ஒரு தாயின், குழந்தைப் பாக்கியம் கிட்டாத ஒர் அபலைத் தாயின் உண்மையான பாசம் அவளது அளப்பரிய சோகங்களையெல்லாம் மீறிக் கொண்டு நுங்கும் நுரையுமாகப் புதுவெள்ளமென அன்புடன் பிரவாகமெடுத்து ஒடவில்லையா ?

அனுதாபத்துக்கு உகந்த பாலா சொல்வாள்: இரண்டு பெண்டாட்டிக்காரனான துரைப்பாண்டி என்கிற வளர்ப்புப் பிள்ளையைக் குறித்துச் சொல்லுவாள்; “டாக்டர் நான் துரையைக் கல்யாணம் பண்ணிக்கப் போற தில்லே. ஹி இஸ் மை ஸன் ; என்ன பார்க்கிறீங்க ? அவன்