பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 131

என்னோட குழந்தைதான்! இப்ப அவனுக்கு ஒரு தாயோட அன்பும் அரவணைப்பும் தேவை. எனக்குப் பாசத்தைக் கொட்ட ஒரு மகன் தேவை. அதுக்கு என்ன செய்யறது ? எனக்கே இன்னம் ஒரு பத்து வயது கூடுதலா இருந்து,

இல்லா-டி அவனுக்கு ஒரு பத்து வயசு குறைச்சலா இருந்தா, இந்த உறவை அசிங்கமா நினைக்க மாட்டீங் களோ, என்னவோ ? கொஞ்சம் வயசான குழந்தையை யாரும் தத்து எடுத்துக்கறதில்லையா ? துரை குழந்தை தான் ! இந்தக் குழந்தைக்கு வேளாவேளைக்குச்சோறுரட்டி

குளிப்பாட்டி, தலைசீவி எல்லாமே அம்மாதான் செஞ்சாக ணும். இந்தக் குழந்தைக்கு நாளாக ஆக, அம்மாவோட

கவனிப்பு அதிகமாக வேண்டியிருக்குமே தவிர, குறையப்

போறதில்லே. ஆமா, டாக்டர் இன்னும் நாலஞ்சு மாசத்துல இவன் காதுல ஒண்ணையும் எடுத்தாகணும்னு நீங்க தானே சொன்னிங்க ? இப்படிப்பட்ட ஒருவனைக்

கலியாணம் செஞ்சுக்கிட்டோ, காதலிச்சோ செய்ய முடியாத உதவியை, ஒரு தாயாலேதான் செய்ய

முடியும்னு நினைக்கிறேன். இவனுக்காக நான் செய்யற

ஒவ்வொரு காரியத்தையும் என் வயித்திலே பிறந்த

குழந்தைக்காகச் செய்யறதாத்தான் நான் நினைக்கிறேன்.

எதையும் நான் பளுவா நினைக்கல்லே. நான் சம்பாதிக்

கறது கூட அவனுக்காகத்தான் !...”

பாலாவின்-நர்ஸ் பாலாவின் ஆழ்ந்த தாயன் பை, உறவுக்காக ஏங்கும் உள்ளத்தின் குமுறலை முழுப் பதிவாகவும் முழுமையான பதிப்பாகவும் சமூகத்துக்கும் சமூக மக்களுக்கும் வெளிப்படுத்த், மேற்கண்ட உள்ளத் தோடு உள்ளம் ஒன்றிய-ஆத்துமார்த்தமான-புனித மான உறவின் பாற்பட்ட பாசத்தின் மனிதாபிமானப் பரிவுமிக்க இதய ஒலி வெகுவாகவே உதவுகிறது :இவ்வுதவி, இளைய பாரதத்தினருக்குப் பரிசுத்த மான உணர்வுகளின் துரண்டுதலாகவும் அமையக்கூடும்; இத்துண்டுதலில் பயன் தரும் நல்லொழுக்கப் படிப்பினை