பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 133

சொல்லத்தான் வந்தேன். சொல்லாமல் கொள்ளாமல் ஒடிட போயிட்டதா எனக்குப் பேர் வரக்கூடாது, பாருங்க !”

அவ்வளவுதான்.

ராமையா குதிக்கிறார்.

ஜெகன் அவளை அறையக் கை ஓங்கியபடி அவள் பேரில் பாய்கிறான்.

பாலா குடையால் தடுத்து நிறுத்துகிறாள் : “இனிமே என்னை அடிக்கிறதுக்கு உங்களுக்கு உரிமை இல்லை. என் மேலே கை வச்சீங்கன்னா, போலீசக்குக் கம்ப்ளெயின்ட் கொடுத்திடுவேன்,” என்கிறாள்.

அதிர்ச்சி அ ைட கி ற | ன் ஜெகன் : என்னடி சொன்னே ?”

பாலா நிதானமாகவே ஆரம்பிக்கிறாள் : “உஷ், அநாவசியமாய்க் கத்தாதீங்க. எனக்கும் உங்களுக்கும் நடுவிலே என்ன பந்தம் இருக்கு ? சொல்லுங்க பார்க்க லாம் நீங்க என் கழுத்திலே தாலி கட்டினதைத் தவிர, உருப்படியா என்ன காரியம் எனக்காக இதுவரைக்கும் செஞ்சிருக்கீங்க ? ஒரு நாள், ஒரேயொரு நாள் கூட என்னைத் தலைநிமிர்ந்து வாழவிடலை ஆஸ்பத்திரியில் தான் ஆகட்டும்; இந்தத் தெருவில்தான் ஆகட்டும், எனக்கு எத்தனை கெட்ட பேரு எல்லாம் யாராலே ? தப்பே செய்ய த நான் எதுக்காக விபச்சாரிங்கற பட்டப் பேரைச் சுமக்கனும் ? உண்மையிலேயே, நீங்க என் கஷ்டத்தைப் புரிஞ்சுக்கிட்டிருந்தீங்கன்னா, இப்படி ஒரு இக்கட்டு வந்ததுக்காக நீங்க வருத்தப்பட்டிருந்தீங்கன்னா, பாலா, நான் செஞ்சது தப்புதான்’னு ஒரு தடவையாவது மனம் வருந்திச் சொவ்லியிருந்தீங்கன்னா, அந்தப் பட்டத்தைக் கூட நான் சந்தோஷமாச் சுமப்பேன். என் புருஷனுக்கு என்னைப் பத்தித் தெரியும். ஊர் என்ன பேசினா

ஜெ-9