பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

என்னான்னு தலைநிமிர்ந்து நடந்திருப்பேன். ஆனா, போயும் போயும் ஒரு அயோக்கியனை, ஒரு துரோகியைப் புருஷனா அடைஞ்ச நான் அனாவசியமா இப்பேர்ப்பட்ட கெட்ட பேரை வாங்கிக்க விரும்பலே! போதும். நான் என் வழியிலே போறேன். இனிமே நீங்க வெளியிலே வாங்கற கடனுக்கோ, நீங்க செய்யற அக்கிரமங்களுக்கோ, நான் பொறுப்பாளி இல்லே, என் சம்பளத்திலே ஒரு பைசாகூட இந்தக் குடும்பத்துக்கு இனிமே தரவே முடியாது !...”

மருத்துவ மனையில் கைகள் இரண்டையும் இழந்து ஒற்றைத் தனிநபராக ஆதரவற்று ஏங்கி நின்ற துரைபாண்டி என்னும் ம த யா ைன க் கு இரண்டு பெண்டாட்டிமார்கள் இருந்தும், ஏராளமான சொத்துக் கள் இருந்தும், அவர்களால் அவன் ஒதுக்கப்பட்டுவிடும் சோகநிலை உணர்ந்த நர்ஸ் பாலா அவனுடைய முரட்டுத் தனத்தையும் மீறிய அன்பின் பாசத்தால் நெகிழ்ச்சி அடைந்து, பிள்ளைக்காகத் தவம் கிடந்த தன் கலியைப் போக்கிக் கொள்ளவும், பாசத்தின் அன்பு இல்லாத தன் கணவனிடமிருந்து விடுதலை பெறவும் துடித்து, கடைசி யில், அந்தத் துரைபாண்டிக்கு அன்பின் நிழல் ஆக உருமாறத் துணிகின்ற மேற்கண்ட இருவேறு சந்தர்ப்பங் களிலும் பாலாவின் பாத்திரப் படைப்பு வெகு இயல்பாக வும் சிறப்பாகவும் அமைந்து விட்டது. மேலும் அப் பாத்திரம் முழுமை பெற்றும் ஒலி கூட்டுகிறது : ஒளி காட்டுகிறது !

அனுராதாவைப் பொறுத்தமட்டில், பாலா ஆகி வந்த ஒரு படையல் !

குழந்தைப் பிரச்னைதான் உறவைத் தேடும் பறவை’ கதையிலும் ஜீவனாக அமைகிறது. ஆனாலும், சிவசங்சரி, இந்துமதி ஆகிய இரண்டு ஆசிரியைகட்கும் இல்லாத சமுதநலப் பொறுப்பின் நல்லெண்ணம் அனுராதாவிடம்

  1. அமைந்து விட்டது.

அனுராதாவை வாழ்த்துவோம் ! | C