பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8. பத்ரகாளி !

“மகரிஷி :



பண்புமிக்க மகரிஷி

நமது அருமைத் தமிழ்ச் சமுதாயம் புனிதம் நிரம்பின கோயிலுக்குச் சமம் ; ஆகவேதான், அது வணக்கத்துக்கு உரித்தானதாகவும் விளங்குகிறது.

சமுதாயத்தில் அங்கம் வகிக்கின்ற மக்கள் அந்தச் சமுதாயத்தை வாழ வைக்கும்போது, சமுதாயத்தின் வாழ்த்துக்கள் அச்சமுதாயம் சார்ந்த மக்களுக்குக் கிடைக் கின்றன ; அதுபோலவே, சமுதாயம் தன் மக்களை வாழ் விக்கும்போது. சமுதாய மக்களின் வாழ்த்துக்கள் அச் சமுதாயத்துக்குக் கிடைக்கவும் செய்கின்றன :- ஒன்றுக் கொன்று தொடர்பானதும், ஒன்றிலொன்று தொடர் புடையதுமான இத்தகைய இணைப்பும் பிணைப்பும் சமுதாயத்திற்கு மட்டுமின்றி, சமுதாயத்தின் மக்களுக்கும் அடிப்படைச் சொந்தமாகவும் ஆதாரப் பந்தமாகவும் ஆகின்றன ; ஆக்கப்படுகின்றன - இந்தச் சொந்தத்தை யும் பந்தத்தையும் நடைமுறைப் போக்கில், பண்பியல் வழியில், மரபார்ந்த நெறிமுறையில் மனிதாபிமானத் துடனும் நாகரிகச் சிந்தனையுடனும் பிரதிபலிப்பதுதான் படைப்பு இலக்கியம் !

இந்த அளவிலும், எல்லையிலும் சமுதாயத்தைப் புனிதம் கெடாமலும், பாதை தவறாமலும், பண்பு மாறா மலும் நேர்மைத் திறத்தோடு, சீர்மைத் தெளிவோடு