பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 137

நல்ல பல எழுத்துச் சிந்தனையாளர்கட்கு மத்தியிலே, நிறைகுடப் பாலில் துளி விஷம் கலந்த மாதிரி, சமுதா யத்தைத் தீய வழிப்படுத்தி விடும் கெட்ட நோக்கத் தோடும் பொல்லாத எண்ணத்தோடும் ‘கச்சடா” கதை களை ஆபாசம் ஆபாசமாகக் கடந்த சில ஆண்டுகளாக எழுதிக் குவித்து. பனங் காசுகளையும் குவித்து, அந்த மமதையில் சமூகப் பொறுப்பையும் சமுதாயப் பிரக்கினை யையும் இழந்து இளைய சமுதாயத்தினரைப் பாதை மாற்றி மயக்கி வருகின்ற சுஜாதா, புஷ்பா தங்கத்துரை, இந்துமதி, சிவசங்கரி ஆகிய அந்த நாலு சமூகப் புல் லுருவிகளோடு இப்போது ஹேமா ஆனந்ததீர்த்தன், ராஜேந்திரகுமார் போன்றவர்களும் கூட்டுச் சேர்ந்து வருவது வருந்தத் தக்கது!

இந்நிலை கவலைக்குரியது.

இலக்கியத்தைச் சோதிக்கலாம்.

ஆனால், சமுதாயத்தையும் சமுதாயத்தின் மக்களை, யும் சோதிக்க இவர்கள் யார் ?

ஆனாலும்

பொது மக்கள் இலக்கியத்தை வாழ்த்தி வாழ வைக்கும் பொற்பு மிகுந்த தார்மீகக் கடமையோடு செய லாற்றி வருகின்ற நல்ல எழுத்தாளர்களிலே, மகரிஷி” அன்றும் சரி, இன்றும் சரி, நேர்மையுடனும் நிதானத் துடனும் தமது எழுத்துப் பணிகளைத் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்க செயலாகவும் ஆகிறது.

ஆகவேதான், மகரிஷியை நான் இப்போது மீண்டும் சந்திக்கவும் தயாராகிறேன். .