பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

ஒரு ருக்மிணியின் ச்ோக்க்கத்ை !

பத்திரகாளியை நான் வெகு காலமாகவே உணர் வேன்; அறிவேன்; பிறந்த காலந்தொட்டு, என் உள்ளம் தொட்டு நின்றவள், நிலைத்தவள் அந்தத் தாய். அவள் உலகாளும் அன்னை: 1957 காலக் கட்டத்தில் அமரர் அரு. ராமநாதன் விடுத்த அழைப்பின் பேரில், நான் பத்திரகாளி'யை இனம் கண்டு இனம் காணவும் செய்ய உதவியது ஆசிரியரின் காதல் ஆண்டு மலர்:

இதற்குப் பின்னர்தான், மகரிஷி” ‘பத்ரக்ாளி'யை அறிந்திருக்க வேண்டும்.

தெய்வங்கள் எனக்கு மட்டும் சொந்தம் அல்லதான்.

என்றாலும், தமிழ் எழுத்துலகிலே நன்கு பிரபல மடைந்த கதைகள் மற்றும் நாவல்களின் தலைப்புக்களெல் லாம் திரையில் திருட்டுத்தனமாக நிழலாடி வருவதை நீங்களும் நானும் இன்னமும்கூட வாய்பொத்தி, ஆனால், கண் பொத்தாமல் பார்த்துக் கொண்டுதான் இருக் கிறோம். ;’ “

அண்மையில் ஒரு நிகழ்ச்சி.

முன்னம் ஆனந்த விகடன் போட்டியில் ‘மகுடி’ என்கிற என் ஒரங்க நாடகம் முதற் பரிசினைப் பெற்றது; அந்த வெற்றியில் என் இல்லற வாழ்வின் முதற் பெருஞ், சோகம் விதியாகச் சிரிக்க நேர்ந்தது. முதல் மனைவியின் பேரிழப்பில் கிட்டிய அவ்வெற்றியை நினைவூட்டும் ‘மகுடி”யை மகுடியின் ஜீவ நாதத்தை நான் கேட்க மறந்து எத்தனையோ ஆண்டுகட்குப் பின்னர், மூன்று ஆண்டு களுக்கு முந்தி ‘மகுடி'யைப் படமெடுக்க வேண்டுமென்று நல்லவர் ஒருவர் படஅதிபராக என்னைத் தேடி வந்தார்.