பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12 Δ ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை


நான் சாடிய சமுதாயப் பொது விரோதிகளான அந்த நாலு பேர்களிடையே இலக்கியப் பொறுப்பும் சமூகக் கடமையும் கொண்ட விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் சரி, ஏற்படுத்தாமல் போனாமலும் சரி- அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை; அக்கறையும் கிடையாது ! ஆனால், என்னுடைய எழுத்துக்கள் இலக்கியத் தருமத்தை மதிக்கும் ரசிகர்களுக்கு மத்தியிலும், சத்தியப் பண் பாட்டின் கண் திறக்கப் பெற்ற இளந்தலைமுறை சார்ந்த பெரும்பாலான பத்திரிகை வாசகர்களுக்கு நடுவிலும் கடமையும் கட்டுப்பாடும் கண்ணியமும் நிறைந்த ஆரோக்கியமான, நல்லதொரு விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டது என்கிற அந்த மகத்தான நல்விளைவிலேதான் நான் அக்கறைமிக்க ஆறுதல் அடைகிறேன். அந்த அளவில், என் பணி பயன்மிக்கதாகவும் அமைந்து விட்டதுதானே?... - :

கலப்படம் செய்தல் சட்ட விரோதச் செயல்.

ஜனநாயக தர்மம் இலக்கியத்திலும் பேணிப் பாதுகாக்கப்படும் ஆத்மார்த்தமானதும் பாரம்பரிய பெருமையுடையதுமான உண்மையின் உன்னதங்கள் நிரம்பின தமிழ்ப்படைப்பிலக்கியம்தான் நம்முடைய தமிழ்ச் சாதிக்கு வழிகாட்டி, அதை வாழவைக்க முடியும் பின், தமிழ்ச் சமுதாயத்தை வாழவைக்கும் நல்ல தமிழ் இலக்கியப் படையல்களை நம் தமிழ்ச் சமூகம் வரவேற்று வாழவைக்கக் கேட்கவும் வேண்டுமா ? திறனாய்வு முறையில் ஒரு விழிப்பு :

தொன்மை மிக்க தமிழ் மொழியைத் தொன்மை மிகுந்த காலத்திலேயே தொல்பெருங் கவிவாணர்கள் ஏற்றி போற்றிப் புகழ்ந்து பாடினர். இந்த இருபதாம் நூற்றாண்டின் ஈடிணையற்ற தேசிய ஒருமைப்பாட்டுக் கவியாகத் தமிழ்மண்ணில் அவதரித்த மகாகவிக்குத்தான் தமிழின்பால்