பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

டானம் மிகுந்த தமிழ்க்குலப் பெண்ணான குக்மிணியை அம்மி மிதித்து, அருந்ததி'பார்த்து, அக்கினியையும் சாட்சி வைத்துத் திருமணம் செய்து கொண்டான் கணேசன்; அவன் ரசனை யுள்ளம் கொண்ட இளைஞன்; தனக்கு வரும் மனைவி அழகானவளாக இருக்க வேண்டு மென்று விரும்பினான்; ஒரளவுக்குப் படிப்பு வாசனை கொண்டவளாகவும் இருக்க வேண்டு மென்பதும் அவன் ஆசையாக அமைந்தது. ஆசை நிறைவேறியது.

கனவுகள் பின்னும் ரசானுபவங்கள் மண்டிய கணேசனுக்கு ருக்மிணி அன்பும் பண்பும் கொண்ட ஒர் அழகான இல்லத்தரசியாகவே வாய்த்தாள். ஆனால், பலமும் பலவீனமும் நிரம்பிய சராசரிப் பெண்ணான ருக்மிணியிடம் உடலின் பலவீனத்தைக் காட்டிலும், உள்ளத்தின் பலவீனம்தான் மேலோங்கி நின்று முனைப்படை கின்றன. ருக்மிணி பயந்த சுபாவம் உடையவள்; பெரிய சத்தம், கூட்டம் போன்ற சலசலப்புக் களும் சங்கடங்களும் அவளுடைய இயல்பான சுபாவத்திற்கு ஏற்பதில்லை. இந்த மனப்போக்கு வியாதியோடு சேர்த்தி இல்லை; சுபாவம், பழ கினால் சரியாகிவிடும்.

ஆனால்

கணேசன் நம்பியது பொய்த்தது.

ருக்மிணியின் மனப்பயமும் சித்தப்பிரமையும் நாளுக்கு நாள் வளர்பிறை ஆயின. இந் நிலையில், அவள் கருத்தரித்து, அழகான பெண் தெய்வம் ஒன்றையும் மகளாகப் பெற்றெடுத் தாள். பெற்றெடுத்த அலுமேலுவைச் சீராட்டிப் பாராட்டவோ, அவளுடன் கொஞ்சிக் குலா வவோ விதி அனுமதிக்காத காரணத்தால்,